தாய்லாந்து சுற்றுப்பயணத் துறைக்கு உயிரூட்ட இந்தியத் திருமணங்கள்

தாய்லாந்து சுற்றுப்பயணத் துறைக்கு உயிரூட்ட இந்தியத் திருமணங்கள்

1 mins read
cf36fa21-36cc-4075-898e-9d07a29cd037
சுற்றுப்பயண வருவாயை உயர்த்துவது தாய்லாந்தின் இலக்கு. கோப்புப் படம்: ஃபேஸ்புக் / 'சிங்கப்பூர் இந்தியன் வெடிங்ஸ்' -

பேங்­காக்: தாய்­லாந்து இவ்­வாண்­டி­று­திக்­குள் தனது சுற்­றுப் பயண வரு­வாயை 600 பில்­லி­ய­னி­லி­ருந்து 700 பில்­லி­யன் பாட் (23 பில்­லி­யன் - 27 பில்­லி­யன் வெள்ளி) வரை அதி­க­ரிக்­கும் இலக்­கைக் கொண்­டுள்­ளது. அதற்கு வகை­செய்ய இந்­திய திரு­ம­ணக் கொண்­டாட்­டங்­கள் தொடர்பிலான நிகழ்­வு­க­ளுக்கு செலவு செய்­வோரை ஈர்க்­கத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­தாக அந்­நாட்­டின் மூத்த சுற்­றுப்­ப­யண அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார்.

இந்­திய திரு­ம­ணத் துறை பல பில்­லி­யன் டாலர் மதிப்­பு­கொண்­டது. கிரு­மிப் பர­வல் சூழல் ஓய்ந்து­ வ­ரு­வ­தைத் தொடர்ந்து அத்­து­றை­யில் தேவை அதி­க­ரித்­தி­ருக்­க­லாம்.

அதைத் தனக்கு சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள தாய்­லாந்து எண்­ணம் கொண்­டுள்­ள­தாக அந்­நாட்­டின் சுற்­றுப்­ப­யண ஆணை­யத்­தின் துணை ஆளு­நர் சிரிப்­பாக்­கோர்ன் நியாவ்­ச­மூட் ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னத்­தி­டம் இந்த வாரம் கூறி­யிருந்தார்.

கடந்த ஈராண்­டு­களில் பல இந்­தி­யர்­கள் திரு­ம­ணம் செய்­து­கொண்­ட­னர்; ஆனால் தே­னி­லவுக்கு அவர்­க­ளுக்கு சரி­யான இடங்கள் அமையவில்லை என்று தக­வல்­கள் தெரி­வித்­துள்­ள­தாக அவர் கூறி­னார். அத்தகையோரை ஈர்ப்பது தாய்லாந்தின் இலக்கு.