பெக்காசி (இந்தோனீசியா): இந்தோனீசியாவின் மேற்கு ஜாவா மாநிலத்தில் பள்ளிக்கு வெளியே நிகழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட குறைந்தது 10 பேர் மாண்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். பெக்காசி நகரில் பள்ளி முடிந்த பிறகு பேருந்து நிறுத்தத்தில் மாணவர்கள் காத்துக்கொண்டிருந்தபோது அவர்களை நோக்கி வந்த ஒரு லாரி இரண்டு மோட்டார்சைக்கிகள் மீது மோதியது. ஒரு தொலைத்தொடர்பு கட்டடம் கவிழ்ந்ததாகவும் போக்குவரத்து காவல்துறையினர் கூறினர். விபத்தில் 20 சிறுவர்கள் காயமடைந்தனர். லாரியின் ஓட்டுநர் தடுத்து வைக்கப்பட்டதாகக் காவல்துறையினர் கூறினர். படம்: ராய்ட்டர்ஸ்
இந்தோனீசியாவில் நிகழ்ந்த லாரி விபத்தில் 10 பேர் மரணம்
1 mins read
-

