மாறிவரும் காற்பந்துப் போக்கு

பிர­சன்னா கிருஷ்­ணன்

இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்­பந்து குழுக்­கள் புதிய விளை­யாட்­டா­ளர்­களை வாங்­கு­வ­தற்­கான காலக்­கெடு சிங்­கப்­பூர் நேரப்­படி நேற்று அதி­காலை சுமார் ஆறு மணிக்கு நிறை­வ­டைந்­தது. கடைசி சில நிமி­டங்­க­ளில்­கூட பரி­வர்த்­த­னை­கள் இடம்­பெ­றும்.

இந்த இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் பரு­வ­மும் அவ்­வாறே அமைந்­தது. கடைசி நேரத்­தில் முன்­னாள் ஆர்­ச­னல் வீரர் பியே எமெ­ரிக் ஒப­மெ­யாங்கை வாங்­கி­யது செல்சி. நடப்பு வெற்­றி­யா­ளர் அணி­யான மான்­செஸ்­டர் சிட்டி சுவிட்­சர்­லாந்து தற்­காப்பு ஆட்­டக்­கா­ரர் இமே­னு­வெல் அக்­கான்­ஜியை வாங்­கி­யது. தற்­கா­லிக ஒப்­பந்­தத்­தின்­கீழ் பிரே­சி­லிய வீரர் ஆர்த்­தர் மெலோ லிவர்­பூ­லில் சேர்ந்­தார்.

இவை ஒரே நாளில் இடம்­பெற்ற பல பரி­வர்த்­த­னை­களில் ஒரு­சில மட்­டுமே.

மான்­செஸ்­டர் யுனை­டெட்­டின் போர்ச்­சு­கீ­சிய வீரர் கிறிஸ்­டி­யானோ ரொனால்­டோவை வாங்க எந்த அணி­யும் முன்­வ­ரா­தது ஆச்­ச­ரி­யமே. சவூதி அரே­பி­யா­வைச் சேர்ந்த பெயர் வெளி­யி­டப்­ப­டாத ஓர் அணி மட்­டுமே விதி­வி­லக்கு.

யுனை­டெட்­டின் மற்ற விளை­யாட்­டா­ளர்­க­ளுக்கு ரொனால்­டோ­வைப் பிடிக்­க­வில்லை என்று வெளி­யான தக­வல்­கள், அவர் எதிர்­பார்க்கும் சம்­ப­ளம் போன்ற

கார­ணங்­க­ளால் பல குழுக்­கள் வில­கி­யி­ருக்­க­லாம்.

நட்­சத்­தி­ர­மாக இருந்­தா­லும் 37 வயது விளை­யாட்­டா­ள­ருக்கு அதி­கம் செலவு செய்ய குழுக்­கள் தயங்­கி­யி­ருக்­க­லாம்.

ரொனால்­டோ­விற்கு ஏற்­ற­வாறு அணி­கள் இயங்­க­வேண்­டும் என்ற ஒரு­வகை நியதி சுமார் ஓராண்­டுக்கு முன்பு வரை இருந்­தது. அவ­ரின் இடத்தைப் பிடிப்பது என்­பது பல வீரர்­கள் நினைத்­துப் பார்க்க முடி­யாத ஒன்று, அப்­போது.

இன்றோ வேறு வழி­யின்றி யுனை­டெட்­டில் இருக்­கும் ரொனால்டோ எல்லா ஆட்­டங்­க­ளி­லும் இடம்­பெ­று­வது உறு­தி­யல்ல. அவ­ருக்­குப் போட்­டி­யாக யுனை­டெட்­டில் ஆன்­டனி மார்­சி­யால், மார்க்­கஸ் ரேஷ்­ஃபர்ட், ஜேடன் சாஞ்சோ, ஆன்­டனி இலாங்கா, அதிக தொகைக்­குப் புதி­தாக வாங்­கப்­பட்­டுள்ள பிரே­சி­லிய வீரர் ஆன்­டனி ஆகி­யோர் இருக்­கின்­ற­னர். இவர்­கள் அனை­வ­ரும் 26 வய­துக்­குக்­கீழ் உள்­ள­வர்­கள்.

பின்­னுக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ளார் ரொனால்டோ. அர்­ஜெண்­டினா வீரர் லய­னல் மெஸ்­ஸி­யின் நிலை­மை­யும் முன்போல் இல்லை. மெஸ்ஸி, ரொனால்டோ கடி­வா­ளத்­தைக் காற்­பந்து உல­கம் அகற்­றத் தொடங்­கி­விட்­டது.

இரு­வ­ரும் மாபெ­ரும் நட்­சத்­தி­ரங்­கள் என்­ப­தில் சந்­தே­கம் இல்லை. ஆனால் எல்லா வீரர்­க­ளின் சகாப்­த­மும் நிறை­வுக்கு வரும் என்­ப­தற்கு இப்­ப­ரு­வம் ஒரு சான்­றாக அமை­ய­லாம். எனி­னும் எந்த முடி­வுக்­கும் வர­வேண்­டாம். விமர்­ச­னம் செய்­வோரை மண்­ணைக் கவ்வ வைக்­கும் ஆற்­றல் ரொனால்­டோ­விற்கு உண்டு.

இந்­நி­லை­யில், இம்­மா­தம் 8ஆம் தேதிக்­குள் அவர் துருக்­கி­யின் ஃபெனபாச்சே குழு­வில் சேரக்­

கூ­டும் என்­றும் சில தக­வல்­கள் வெளி­யா­யின.

துருக்­கி­யில் புதிய விளை­யாட்­டா­ளர்­களை வாங்­கு­வ­தற்­கான காலக்­கெடு இம்­மா­தம் 8ஆம் தேதி நிறை­வ­டை­கிறது.

லீக் பரு­வம் தொடங்கி மூன்று ஆட்­டங்­கள் கடந்­த­போது லிவர்­பூல், சிட்டி, செல்சி ஆகிய குழுக்­கள் பின்­னுக்­குத் தள்­ளப்­ப­ட­லாம் என்ற கருத்து நில­வி­யது. இப்­போது ஐந்­தா­வது ஆட்­டங்களுக்குப் பிறகு சிட்டி, லிவர்­பூல் இரண்­டும் நன்கு மீண்டு வந்­துள்­ளன.

குறிப்­பாக, சிட்டி இதர குழுக்­க­ளைத் திக்­கு­முக்­கா­டச் செய்து வரு­கிறது. அதன் புதிய நட்­சத்­தி­ரம் எர்­லிங் ஹாலண்­டைத் தடுக்­கத் தெரி­யா­மல் அணி­கள் திணறு ­கின்­றன.

செல்­சி­யின் சரிவோ தொடர்­கிறது. அதைச் சரி­செய்­யத்­தான் நேற்று அதி­காலை ஒப­மெ­யாங், டெனிஸ் ஸக்­கா­ரிய (தற்­கா­லிக ஒப்­பந்­தம்) ஆகி­யோரை வாங்­கி­யது செல்சி.

முன்­னைய நட்­சத்­தி­ரம் டிடியே டிரோக்­பா­வின் இடத்தை நிரப்ப கிட்­டத்­தட்ட 10 ஆண்­டு­க­ளாக சிர­மப்­பட்டு வந்­துள்­ளது செல்சி. 33 வயது ஒப­மெ­யாங்­கா­வது குறை­யைத் தீர்க்­க­வேண்­டும்.

பரு­வத்­தைப் படு­மோ­ச­மா­கத் தொடங்­கிய யுனை­டெட் இப்­போது சீராக உள்­ளது. விறு­வி­றுப்­பாக ஆடா­மல் வெற்­றி­பெ­று­வ­தற்­குத் தேவை­யான உத்­தி­களை அது செயல்­ப­டுத்தி வருகிறது.

லீக் பட்­டி­ய­லில் முத­லி­டத்தை வகிக்­கும் ஆர்­ச­ன­லு­டன் நாளை மோது­கிறது யுனை­டெட். அதில் சம­நி­லை­யா­வாது காணா­விட்­டால் மீண்­டும் விமர்­ச­னங்­களை எதிர்­நோக்­கு­வார் அதன் நிர்­வாகி எரிக் டென் ஹாக்.

ஆர்­ச­னலை இது­வரை மிகச் சிறப்­பாக ஆட வைத்து எதிர்­பார்ப்­பு­களை மிஞ்­சி­யுள்­ளார் அதன் நிர்­வாகி மிக்­கெல் அர்­டெட்டா.

இங்­கி­லாந்து காற்­பந்­தில் ஜென்ம விரோ­தி­க­ளான லிவர்­பூ­லும் எவர்ட்­ட­னும் இன்று மோது­கின்­றன. இன்­றைய மற்­றோர் ஆட்­டத்­தில் முன்­னாள் லிவர்­பூல் வீரர் ஸ்டீ­வன் ஜெரார்ட் நிர்­வா­கி­யாக இருக்­கும் ஆஸ்­டன் வில்லா,

சிட்­டி­யைச் சந்­திக்­கிறது.

லீக் பரு­வம் தொடங்கி ஒவ்­வோர் அணி­யும் ஐந்து ஆட்­டங்­களே ஆடி­யுள்­ளன. இப்­போது

ஒன்­றும் கணிக்­க­மு­டி­யாது.

எனி­னும், சரிவை எதிர்­கொண்ட குழுக்­கள் கவ­ன­மாக இருக்­க­வேண்­டும், பிற குழுக்­களை ஊதித் தள்­ளு­ம் குழுக்கள் மெத்தன­மாக இருந்து­வி­டக்­கூ­டாது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!