கலைஞனின் ஆதங்கத்தை வெளிப்படுத்திய உரை நாடகம்

மேடை நாட­கங்­கள், நேரடி நிகழ்ச்சிகளின் தனித்­து­வம் என்பது, ரத்­த­மும் சதை­யு­மாக நேரில் தோன்­றும் கலை­ஞர்களின் குரல்கள், பேச்சு, பேச்­சுத் தொனி, முக­பா­வங்­கள், உட­ல­சைவுகள், அவற்­றின் மூலம் வெளிப்­படும் உணர்­வு­கள் அத்­த­னை­யை­யும் உட­ன­டி­யாக, ஒரு குழு­வாக உள்­வாங்க முடி­வது.

பல பேரு­டன் கூட்­டா­கச் சிரித்து, புரு­வம் உயர்த்தி - சுருக்கி, 'ச்சு' கொட்டி, வியந்து, மகிழ்ந்து, சலித்து, ஆமோ­தித்து, மறுத்து நம் உணர்­வு­களை வெளிப்­ப­டுத்த முடி­வது.

இரண்­டாண்­டு­க­ளுக்கு மேலாக, இப்­படி குழு­வாக எந்த உணர்­வை­யும் பகி­ர­மு­டி­யாது மூச்சு முட்­டிக்­கொண்­டி­ருந்த இறுக்­கம் மெல்­லத் தளர்ந்­துள்ள நிலை­யில், உள்­சிந்­த­னையோ, வெளிச்­சிந்­த­னையோ இன்றி நிகழ்­வில் லயித்­தி­ருக்க வைத்­தது சென்ற வாரம் அரங்­கே­றிய அல்­ஃபி­யான் சாட் எழு­திய நாட­கம்.

'தி டெத் ஆஃப் சிங்­கப்­பூர் தியேட்­டர் எஸ் ஸ்க்­ரிப்­டட் பாய் தி இன்­ஃபொ­காம் மீடியா டெவ­லப்­மன்ட் அத்­தோ­ரிட்டி ஆஃப் சிங்­கப்­பூர்' என்பது நாட­கத்தின் பெயர்.

கடந்த 1ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை முக­மட் சுல்­தான் ரோட்­டில் உள்ள அரங்­க­மாக்­கப்­பட்­டுள்ள முன்­னைய சரக்­குக் கிடங்­கில் நிகழ்வு அரங்­கே­றி­யது. தி சப்ஸ்­டே­ஷன் இம்­மா­தம் நடத்­தும் மேடை­நாடக விழா­வின் ஒரு பகு­தி­யாக இந்நிகழ்ச்சி இடம்பெற்றது.

சிங்­கப்­பூ­ரில் மேடை நாடகத் தணிக்கை குறித்தது இந்த நாட­கம்.

தக­வல்­தொ­டர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­ய அதி­காரி ஒரு­வ­ரு­டன் நடக்கும் கற்­பனை உரை­யா­டல் பாணி­யில், இயக்­கு­நர் இர்­பான் கஸ்­பான் வடி­வ­மைத்­தி­ருந்த உரை-நிகழ்த்­துக் கலையை பிர­பல மேடைக் கலை­ஞர் ஃபாரா ஓங் படைத்­தார்.

19ஆம் நூற்­றாண்­டில் கால­னித்­துவ காலத்­தில் தொடங்கி, தற்­போது வரை­ யிலான தணிக்­கைச் சட்­டங்­கள், விதி­ மு­றை­கள், அவை செயல் படுத்­தப்­படும் விதம், தணிக்கை செய்­யப்­பட்ட நாட­கங்­கள், அதன் கார­ணங்­கள், தணிக்­கைக்கு கொடுக்­கப்­பட்ட விளக்­கங்­கள், அவற்­றின் பொருள் மயக்­கம் என்று அத்­த­னை­யை­யும் ஆதி­யோடு அந்­த­மாக எந்­தக் கட்­டுப்­பா­டும் இன்றி தமது அனு­ப­வங்­க­ளை­யும் எண்­ணங்­க­ளை­யும் எழு­தித் தீர்த்­தி­ருந்­தார் அல்­ஃபி­யான் சாட்.

சிங்­கப்­பூர் தணிக்­கை­யின் வர­லாற்றை, ஆவ­ணங்­கள், புகைப்படங்­கள், முந்­தைய அமைச்­சர்­க­ளான ஓங் பாங் பூன், கோ கெங் சுவீ போன்­ற­வர்­க­ளின் பேச்­சு­க­ளு­டன் பார்­வை­யா­ளர்­க­ளின் சிந்­த­னைக்கு முன்வைத்திருந்தார்.

'நோ' என்­ப­தின் வெவ்­வேறு தொனி­களை விளக்கி அழுத்­த­மாக நிகழ்வைத் தொடங்­கிய ஃபாரா, தணிக்­கை­யின் வெம்­மையை வெளிப்­ப­டுத்தி உச்­சத்தை அடைந்து, கடை­சி­யில் 'நீ உன் வேலை­யைத்­தான் செய்­கி­றாய், உன்­மீது எனக்கு எந்த வருத்­த­மும் இல்லை' என்று அதி­கா­ரி­யின் மீதான மெல்­லிய அனு­தாப உரை­யா­ட­லு­டன் நலிந்த தொனி­யில் படைப்பை முடித்­தார்.

ஒரு கலை­ஞ­னின் மன ஆதங்­கத்­தின் வெளிப்­பாடு என்­றா­லும் சலிப்பு தட்­டா­மல் அதை நிகழ்த்தியி­ருந்­தார் ஃபாரா. வெவ்­வேறு நிலை அதி­கா­ரி­கள், தானி­யங்கி இயந்­தி­ரம், அர­சாங்க அறிக்கை, கலை­ஞர்­கள் என பல்­வேறு பாத்­தி­ரங்­க­ளின் மொழி­வ­ழக்­கை­யும் தொனி­யை­யும் பிசிறு இன்றி மாற்றி மாற்றிப் பேசி மேடை­யில் பலர் இருப்­ப­தைப் போன்ற மாயை­யை­ அவர் ஏற்­ப­டுத்­தி­னார்.

நாட­கம் தொடங்­கும்­போது, இங்கே நீங்­கள் என விளிப்­பது அதி­கா­ரியை. நீங்­கள் எல்­லா­ருமே அதி­கா­ரி­க­ளாக உங்­களை பாவித்துக் கொள்ள வேண்­டும், என்று கூறி­ய­தாலோ என்­னவோ, பார்­வை­யா­ளர் ­க­ளை­யும் அல்­ஃபி­யான் சாடு­கி­றாரோ என சில நேரம் தோன்­றி­யது.

தணிக்கை குறித்த வர­லாறு, தணிக்கை விதி­மு­றை­க­ளால் முட்­டித்­தி­ண­றும் ஒரு கலை­ஞ­னின் மனம் என்­ப­தற்கு அப்­பால் செல்­வ­தற்கு இந்த நாடக எழுத்­தில் இட­மி­ருக்­க­வில்லை. ஆனால் ஃபாராவின் நிகழ்த்துதலும் மேடை அமைப்­பும் ஒளி, ஒலி அமைப்­பும் பேச்­சில் இருந்திராத பல­வற்­றை­யும் சொன்­னது.

தணிக்கை விதி­மு­றை­கள் குறித்த பகடி, விளக்­கக் கோரல்­கள், நாட­கங்­க­ளைப் படிக்­கும் அதி­கா­ரி­யின் உணர்­வு­நிலை எப்­படி இருக்­கும், அவர் அழு­வாரா, சிரிப்­பார, சில வச­னங்­க­ளைப் படித்து சிலிர்த்­தி­ருக்­கி­றாரா, உள்­ம­னத்தை எழுத்­தில் கண்டு திடுக்­கிட்­டி­ருப்­பாரா போன்ற வினாக்­கள் பார்­வை­யா­ளர்­களை உரை­யில் மேலும் ஈடுபடுத்­தி­யி­ருக்­க­லாம்.

உணர்ச்சி ததும்ப, உரக்கப் பேசிக் கத்து­வ­தும் அழு­வ­தும், உடல் அசைவையும் அமைப்­பை­யும் கிண்­டல் செய்­வ­தும், அடுக்கு­மொழி வச­னங்­களை அள்­ளிக்­கொட்­டு­வ­துமே நல்ல நடிப்பு என நம்­பத்­தொ­டங்­கி­யி­ருக்­கும் நிலை­யில், சின்ன சின்ன அசைவுகள், மென்­மை­யான பேச்­சு­கள், ஓர் உரை போன்றவை ஒரு கலையை நிகழ்த்­திக் காட்­ட­மு­டி­யும் என்­பதை ஃபாரா அழ­காக எடுத்­துக்­காட்­டி­யி­ருந்­தார்.

நிகழ்த்து மேடைக்­கான ஒளி, ஒலி அமைப்­பு­களோ, மேடை, காட்சி அமைப்போ இல்­லாத சரக்­குக் கிடங்­கின் அறை­யை அரு­மை­யான நிகழ்த்துக் கலை அரங்­காக மாற்­றி­யி­ருந்­த­னர். ஃபாராவின் உணர்­வு­ க­ளைக் கச்­சி­த­மாக வெளிப்­ப­டுத்­தி­ன ஒளி­ய­மைப்­பும் இசை­யும். அந்த அறை­யின் மின்­சா­ரம் கட்­டுப்­பாடு, அலமா­ரி கத­வு­களைத் திறந்து விடு­வ­தையே ஓர் அரங்­கச் செய­லாக மாற்­றி­யி­ருந்த விதம் சிறப்பு.

மேடை என்­ப­தன் பொரு­ளையும் அதன் தாக்­கத்தையும் நன்கறிந்த கலை­ஞர்­க­ளால் படைக்­கப்­பட்ட ஒரு படைப்பை நீண்­ட­நாள்­களுக்குப் பின்­னர் பார்க்க முடிந்­த­தில் நிறைவு.

-லதா

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!