சிங்கப்பூர் தீவுகளில் உல்லாச சுற்றுலா

வெளிநாடுகளுக்குச் சென்றால்தான் உல்லாச சுற்றுலா அனுபவத்தைப் பெற முடியுமா? சிங்கப்பூரைச் சுற்றிய சிறு சிறு தீவுகளை வலம் வந்தாலே கண்களுக்கு விருந்தையும் இயற்கையோடு இணைந்திருக்கும் இனிய அனுபவத்தையும் பெறலாம். உலவலாம், வாருங்கள்.

கூசுத் தீவு

ஒவ்­வொரு நாட்­டைச் சுற்­றி­யும் தொன்­மங்­களும் கதை­களும் உண்டு. அவ்­வா­று­தான் கூசுத் தீவைச் சற்றி பழங்­க­தை­கள் பின்­னப்­பட்­டுள்­ளன.

கடல்­சீற்­றத்­தில் சிக்­கிய சீன, மலாய் ஆட­வர்­கள் இரு­வ­ரைக் காப்­பாற்ற வந்த பெரிய ஆமை ஒன்று, பின்­னர் கூசுத் தீவாக மாறி­யது என்­பது கதை.

சிங்­கப்­பூ­ரின் அணுக்­க­மான பல்­லின உற­வு­க­ளுக்கு மற்­று­மோர் எடுத்­துக்­காட்டு அங்­குள்ள துவோ பே கோங் சீனக் கோவி­லும் மலாய் பெரி­ய­வர்­க­ளின் மூன்று புனி­தச் சமா­தி­களும்.

ஒவ்­வோர் ஆண்­டும் செப்­டம்­பர் மாத இறு­தி­யி­லி­ருந்து நவம்­பர் வரை அங்­குள்ள துவோ பே கோங் கோவி­லுக்­கும் மலாய் சமா­தி­க­ளுக்­கும் சென்று வழி­பட்டு வரு­வது பல­ரின் வழக்­கம்.

ஏப்­ரல் மாதத்­தில் ஏற்­பட்ட தீயில் கூசுத் தீவில் உள்ள புனித மலாய் சமா­தி­கள் சேத­ம­டைந்­தன. அவற்­றின் மறு­சீ­ர­மைப்­புப் பணி­கள் சுமார் 70 விழுக்­காடு முடிந்­து­விட்­டன.

சமா­தி­க­ளின் சீர­மைப்­புப் பணி­கள் செப்­டம்­பர் இறு­திக்கு முன்­னால் முடிந்­து­வி­டும் என்று அவற்­றின் பாது­கா­வ­லர் கூறி­யுள்­ளார்.

கூசுத் தீவில் இரவு தங்க முடி­யாது. மரினா சவுத் பட­குத்­து­றை­யி­லி­ருந்து பட­கில் தீவுக்­குச் செல்­ல­லாம். பய­ணம் ஒரு மணி நேரம். முத­லில் செயிண்ட் ஜான் தீவு சென்­று­விட்டு படகில் கூசுத் தீவுக்குத் தொடர்ந்து செல்­ல­லாம்.

செயிண்ட் ஜான் தீவு

அந்­நா­ளில் கப்பலில் வந்தவர்களின் தொற்­று­நோய் தனிமைக் காப்­பி­ட­மாக இருந்த செயிண்ட் ஜான் தீவைத் தமி­ழர்­கள் புற­மலை என்று அழைத்­தது சில­ருக்கு நினை­வி­ருக்­க­லாம்.

இன்று செயிண்ட் ஜான் தீவு நக­ரத்­தின் அழுத்­தத்­தி­லி­ருந்து தப்­பிச்­சென்று ஓரிரு நாள் பொழு­து­போக்­குப் புக­லி­ட­­மாக உள்­ளது.

கடல் உயி­ரின ஆய்­வு­கள் நடை­பெ­றும் செயிண்ட் ஜான் தீவில் ஒரு சில பகு­தி­ளுக்கு மட்­டுமே பொது­மக்­கள் செல்ல முடி­யும்.

கடற்­க­ரை­யில் இளைப்­பா­ற­வும் நீச்­ச­ல­டிக்­க­வும் உகந்த இடம் செயிண்ட் ஜான் தீவு. பத்து பேர் வரை தங்­கும் விடு­முறை பங்­க­ளாக்­களும் அங்­குண்டு.

செயிண்ட் ஜான் தீவி­லி­ருந்து அரு­கில் உள்ள லஸா­ரஸ் தீவு, செரிங்­காட் தீவு, கியாஸ் தீவு ஆகி­ய­வற்­றுக்கு நடந்து சென்று அவற்­றைக் கண்டு மகி­ழ­லாம்.

மேலும், செயிண்ட் ஜான் தீவு பற்றி விளக்கச் சுற்­று­லாக்­கள் ஒவ்­வொரு மாதத்­தின் முதல் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யில் நடை­பெ­றும்.

கூசுத் தீவைப் போலவே மரினா சவுத் பட­குத்­து­றை­யி­லி­ருந்து தீவுக்குச் செல்ல முடி­யும்.

சிஸ்­டர்ஸ் தீவு

சிங்­கப்­பூ­ரின் தெற்­கில் குறிப்­பாக செயிண்ட் ஜான்ஸ் தீவ­ருகே அமைந்­துள்­ளன சிஸ்­டர்ஸ் தீவு­கள்.

சிஸ்டர்ஸ் தீவு கட­லில் அமைந்­துள்ள ஒரு பசு­மை­யான சொர்க்­கம் என்று சிலர் கூறுவார்கள். தீவின் அருகே இரண்டு சகோ­த­ரி­கள் மர்­ம­மான முறை­யில் காணா­மல் போன­தால் அந்­தப் பெயர் வந்­தது.

சிஸ்­டர்ஸ் தீவு­களில் சிங்­கப்­ பூரின் கடற்­பா­றை­க­ளைப் பாது­காக்­கும் நோக்­கம் கொண்ட கடல் உயி­ரி­னப் பூங்கா அமைக்­கப்­பட்­டுள்­ளது.

ஆமை­கள் குஞ்சு பொரிப்­ப­தற்­காக இந்நாட்டில் முதல்முதலாக அமைக்கப்பட்ட இட­மும் இங்கு உள்­ளது. இரண்டு தீவு­களில் பிக் சிஸ்­டர் தீவுக்கு மட்­டுமே பொது­மக்­க­ள் செல்ல முடியும்.

கோனி தீவு

சிராங்­கூன் தீவு என்று முன்னர் அழைக்­கப்­பட்ட 'கோனி' தீவு முன்பு ஹாவ் பார் சகோ­த­ரர்­க­ளுக்­குச் சொந்­த­மாக இருந்­தது.

சிங்­கப்­பூ­ரின் மிக அழ­கான பூங்­காக்­களில் ஒன்று 'கோனி' தீவுப் பூங்கா.

இயற்கை வாழ்­வி­டங்­க­ளை­யும் பற­வை­க­ளை­யும் பார்த்து ரசிக்­க­வும் சைக்­கிள் ஓட்­ட­வும் உகந்த இடம் இது.

பொங்­கோல் கடற்கரை­யி­லி­ருந்து 'கோனி' தீவுக்கு நடந்து அல்­லது சைக்­கி­ளில் செல்­ல­லாம்.

கையில் உள்ளதைப் பறிக்கும் குரங்­கு­கள் உள்­ளன, கவ­னம்.

செக் ஜாவா

செக் ஜாவா, உபின் தீவின் கிழக்­கில் உள்ள பகு­தி­யா­கும். ஆனால் அதன் கொள்ளை அழ­கைப் பார்ப்­ப­தற்­காக மட்­டுமே அங்கு செல்ல வேண்­டும். கடற்­கரை மணல், கடற்­க­ரைப் பாறை­கள், சுதுப்­பு­நி­லம், கரை­யோர வனங்­கள் உள்­ளிட்ட ஆறு வெவ்­வேறு வகைத் திணை­கள் ஒரே இடத்­தில் அமைந்­துள்­ள­து­தான் செக் ஜாவா­வின் தனித்­து­வம்.

100 ஹெக்­டர் பரப்­ப­ளவு உள்ள செக் ஜாவா பகுதி, உபின் தீவின் பட­குத் துறை­யி­லி­ருந்து மூன்று கிலோ­மீட்­டர் தொலை­வில் உள்­ளது. அங்­கி­ருந்து வேன் அல்­லது சைக்­கிளை வாட­கைக்கு எடுத்­துச் செல்­ல­லாம். விரும்­பி­னால், 40 நிமி­டம் நடந்தே செல்­ல­லாம்.

செக் ஜாவா சதுப்பு நிலப் ­பகுதி­யைப் பற்­றி­யும் அதன் பல்­வேறு இயற்கை வாழ்­வி­டங்­கள் பற்­றி­யும் விளக்­கும் வழி­காட்­டப்­பட்ட சுற்­று­லாவை மேற்­கொள்­ள­லாம்.

ஏழு மாடி உய­ர­முள்ள ஜெஜாவி கோபு­ரத்­தில் முடிந்­தால் ஏறி கட்­டா­யம் 360 டிகிரி சுற்றி தீவைப் பார்க்க வேண்­டும். அத்­து­டன் பழைய மேற்­கத்­திய டுடோர் பாணி­யில் கட்­டப்­பட்ட ஒன்­றாம் எண் வீட்­டைச் சென்று பார்க்க மறக்க வேண்­டாம்.

தின­மும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செக் ஜாவா திறந்­துள்ளது. கடல்­மட்­டம் குறையும் போதுதான், அங்குள்ள கடற்­க­ரை­யின் இயற்கை அழகை நன்­றா­கப் பார்த்து ரசிக்க முடி­யும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!