மேலும் பல திருப்பங்கள் காத்திருக்கலாம்

புதன்கிழமை களநிலைமை

இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுக்களின் நிலையை அலசும் பகுதி

பிரசன்னா கிருஷ்ணன்

இந்த இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் காற்பந்துப் பரு­வத்­தில் குழுக்­க­ளி­டையே அதி­கம் போட்டி இருக்­கக்­கூடும். இதைத்­தான் கடந்த வாரம் நடை­பெற்ற ஆட்­டங்­கள் காண்­பித்­தன.

தொடர்ந்து நான்கு லீக் ஆட்­டங்­களை வென்று பட்­டி­ய­லின் ஐந்­தாம் இடத்­திற்­கு­த் தாவி­யது மான்­செஸ்­டர் யுனை­டெட். அது­வும் முத­லி­டத்தை வகிக்­கும் ஆர்சனலை வென்­றது சாதா­ர­ண­மல்ல.

இப்­ப­ரு­வத்தை மோச­மா­கத் தொடங்­கி­னா­லும் படிப்­ப­டி­யாக முன்­னேறி லிவர்­பூல், ஆர்­ச­னல் இரண்­டை­யும் வென்று­விட்­டது யுனை­டெட். விளை­யாட்­டா­ளர்­களை வாங்­கு­வ­து, யாரைக் களம் இறக்குவது போன்­ற­வற்­றில் நிர்­வாகி எரிக் டென் ஹாக்­கிற்கு முழுச் சுதந்­தி­ரம் தரப்­பட்­டுள்­ளது முன்­னேற்­றத்­திற்­கான முக்­கி­யக் கார­ணம்.

பல ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு பரு­வத்தை மிகச் சிறப்­பாக ஆரம்­பித்த ஆர்­ச­னல் தொடர்ந்து மேம்­ப­ட­ வேண்டும் என்­பதே யுனை­டெட்­டிற்கு எதி­ரான ஆட்­டத்­தில் தெரி­ய­வந்­தது. எனி­னும், ஓர் ஆட்­டத்­தின் முடிவை வைத்து ஆர்­ச­னல் லீக் கிண்­ணத்தை வெல்ல போட்டி போடாது என்று சொல்­ல­மு­டி­யாது. அக்குழு பெரி­தும் மேம்­பட்­டி­ருப்­ப­தில் சந்­தே­கம் இல்லை.

பரு­வத்­தின் முதல் ஆறு ஆட்­டங்­களில் இரண்டை மட்­டுமே வென்­றுள்ள லிவர்­பூ­லில் சாடியோ மானே இல்­லாத குறை தெரி­கிறது. லிவர்­பூ­லி­டம் பழைய உத்­வே­க­மும் உற்­சா­க­மும் இல்லை.

லிவர்­பூ­லு­டன் ஒப்­பி­டு­கை­யில் சிட்டி பர­வா­யில்லை. ஆனால் லீக்­கில் பெரிய அள­வில் தடு­மா­றி­வந்த ஆஸ்­டன் வில்­லாவை வெல்ல முடி­யா­தது சில கேள்­வி­களை எழுப்­பி­யுள்­ளன.

நடு­வ­ரின் தவற்­றால் வில்லா போட்ட இரண்­டா­வது கோல் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை. தோல்­வி­யி­லி­ருந்து தப்­பி­யது கோல் போட எர்­லிங் ஹாலண்டை அதிகம் சார்ந்­தி­ருக்­கும் சிட்டி.

மாறு­பட்ட முன்­னிலை ஆட்­டக்­கா­ர­ரான ஹாலண்­டைத் தடுக்க பல குழுக்­கள் சிர­மப்­ப­டு­கின்­றன. அதற்­கான உத்தி குழுக்­க­ளுக்­குப் புலப்­பட்­டால் சிட்டியை எதிர்த்து எப்­படி விளை­யாடும் என்­பது தெரி­ய­வில்லை.

எனி­னும், சரி­யான முன்­னிலை வீரர் இல்­லா­ம­லேயே கடந்த இரு பரு­வங்­களி­லும் சிட்டி லீக் கிண்­ணத்தை வென்­றதை மறக்­க­முடியாது.

நெருக்­க­டி­யி­லி­ருந்து தன்­னால் மீண்டு வர­மு­டி­யும் என்­பதை செல்சி காண்­பித்­துள்­ளது. கடந்த வாரங்­களில் இது பழைய செல்சி இல்லை என்று சிலர் நினைத்­தி­ருக்­க­லாம். வெஸ்ட் ஹேமி­டம் தோல்­வி­ய­டைந்து கொண்­டி­ருந்­த­போது சரி­யான மாற்று ஆட்­டக்­கா­ரர்­களை அறி­மு­கப்­ப­டுத்தி செல்­சியை 2-1 எனும் கோல் கணக்­கில் வெல்ல வைத்­தார் அதன் நிர்­வாகி தாமஸ் டுக்­கல்.

செல்­சி­யைக் குறைத்து மதிப்­பட முடி­யாது.

அதிக பர­ப­ரப்­பின்றி ஆர்­ச­னல், சிட்டி இரண்­டுக்­கும் ஈடு­கொ­டுத்­து­ வி­ளையாடி வந்­துள்­ளது டோட்­டன்­ஹம் ஹாட்ஸ்­பர். ஆட்­டங்­க­ளைக் கச்­சி­த­மாக வெல்­லும் உத்­தி­களை நன்கு அறிந்து செயல்­படு­கி­றார் ஸ்பர்ஸ் நிர்­வாகி அன்­டோ­னியோ கோன்டே.

லீக் பட்­டி­ய­லில் மூன்­றாம் இடத்­தில் உள்ள ஸ்பர்­சும் இரண்­டாம் இடத்தை வகிக்­கும் சிட்­டி­யும் இந்த வார இறு­தி­யில் மோது­கின்­றன. இரு குழுக்­களும் இது­வரை தோல்­வி­ய­டை­ய­வில்லை.

இரண்­டுக்­கும் வெற்றி வாய்ப்­பு­கள் சமமாக உள்ளது.

அதி­கம் பேசப்­படும் குழுக்­க­ளைப் பற்றி கவ­லைப்­ப­டா­மல் அபா­ர­மாக விளை­யா­டி­வந்­துள்­ளது நான்­கா­வது இடத்தை வகிக்­கும் பிரைட்­டன். ஆறே ஆட்­டங்­கள் நிறை­வடைந்­துள்ள நிலை­யில் பிரைட்­டன் லீக் கிண்­ணத்தை வெல்­வ­தற்கோ பட்­டி­ய­லின் முதல் நான்கு இடங்­களில் முடிப்­ப­தற்கோ போட்டி தரும் என்­பதை உறு­தி­யா­கச் சொல்­ல­முடி­யாது.

ஆனால் அவ்­வாறு நடந்­தா­லும் ஆச்­ச­ரி­யம் இல்லை. கார­ணம், பிரைட்­டன் இது­வரை பிரி­மி­யர் லீக் பரு­வத்தை இவ்­வ­ளவு சிறப்­பா­கத் தொடங்­கி­ய­தில்லை.

பிரைட்­ட­னைப் போல் பிரென்ட்­ஃபர்ட்டும் பெரிய குழுக்­க­ளுக்­குப் போட்டி தரக்­கூ­டும்.

கடந்த வாரத்­தின் பிரி­மி­யர் லீக் ஆட்­டங்­களில் நடு­வர்­களும் 'விஏ­ஆர்' எனப்­படும் காணொ­ளி­யின் உத­வி­யுடன் இயங்­கும் துணை நடுவர்­களும் தவறு­களை இழைத்­த­தா­கப் பல தரப்­பி­னர் கூறி­னர்.

வெஸ்ட் ஹேம், செல்­சிக்கு எதி­ராகப் போட்ட இரண்­டா­வது கோலும் நியூ­காசல் யுனை­டெட் கிறிஸ்­டல் பேல­சுக்கு எதி­ராக போட்ட கோலும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. குறிப்­பாக வெஸ்ட் ஹேமின் கோல் அனு­மதிக்­கப்­பட்­டி­ருந்­தால் அக்­குழு செல்­சி­யு­டன் மோதிய ஆட்­டம் 2-2 எனும் கோல் கணக்­கில் சம­நி­லை­யில் முடிந்­தி­ருக்­கும்.

இவை கடந்த வாரம் இடம்­பெற்ற சர்ச்­சைக்­கு­ரிய நடு­வர், துணை நடு­வர்­க­ளின் முடி­வு­களில் இரண்டு மட்­டுமே. இந்த விவ­கா­ரம் குறித்து பிரி­மி­யர் லீக் நிர்­வா­கக் குழு ஆரா­யப்­போ­வ­தா­கத் தெரி­வித்­தது.

இந்த வாரத்­தின் ஆட்­டங்­களில் நடு­வர்­கள் மேலும் கவ­ன­மாக இயங்­கக்­கூ­டும்.

இந்த இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் பரு­வம் கால் கட்­டத்­தைக்­கூட எட்­ட­வில்லை. இருந்­தா­லும் ஓரிரு அணி­கள் மட்­டுமே சிறப்­பாக செய்­யும் போக்கு இம்­முறை மாறு­ப­ட­லாம் என்­ப­தற்­கான அறி­குறி தென்­படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!