மனதை அமைதிப்படுத்த '333' உத்தி

மனதை அமைதிப்படுத்த '333' உத்தி

2 mins read

கவ­லை­யும் பதற்­ற­மும் ஏற்படும்­போது சிலர் '333 உத்தி'யைப் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர். தாங்­கள் இருக்­கும் சூழ­லில் திடீ­ரெ­னச் சமா­ளிக்க முடி­யாத உணர்ச்­சி­களில் ஒரு­வர் சிக்­கும்­போது, இந்த உத்தி உத­வு­வ­தாகக் கூறப்படுகிறது. இந்த '333 உத்தி'யைப் பயன்­ப­டுத்­தும்­போது ஒரு­வர் தம்­மைச் சுற்றி நடப்­ப­தைக் கவனிக்க வேண்டும். அதன்­படி,

1. கண்­ணில் படும் மூன்று

பொருள்­களைப் பற்றி கூற­வேண்­டும்.

2. காதில் விழும் மூன்று ஒலி­களை அடை­யா­ளம் காண­வேண்­டும்.

3. மூன்று பொருள்­க­ளைத் தொட

வேண்­டும்.

இந்த '333 உத்தி' குறித்து முறை­யான ஆராய்ச்­சி­கள் ஏதும் மேற்­கொள்­ளப்­படா­விட்­டா­லும் அதி­கப்­ப­டி­யான கவ­லையை மெல்­லத் தணிக்க உத­வும் எளிய பயிற்சியாகப் பல­ரும் இதைப் பயன்­ப­டுத்தி வரு­கி­றார்­கள்.

இருப்­பி­னும், சிகிச்­சைக்­குப் பதி­லாக இந்த உத்­தி­யைப் பயன்­ப­டுத்­து­வது தவிர்க்­கப்­பட வேண்­டும்.

மன­நல சிகிச்சை பெறு­வ­தற்கு இடையே பொது­வான சில உத்­தி­களை ஒருவர் கடைப்­பி­டிக்­க­லாம்.

 நெருக்­கு­தல் தரும் சூழ­லி­லி­ருந்து சற்று ஓய்வு எடுத்­துக் கொள்­ள­வும். விருப்­ப­மான இசை­யைக் கேட்­க­லாம் அல்­லது உடற்­ப­யிற்­சி­யில் ஈடு­ப­ட­லாம்.

 மது அருந்­து­தல், காப்பி குடித்­தல் ஆகி­ய­வற்­றைத் தவிர்க்­க­லாம். இவற்­றால் கவலை அதி­கரிக்­க­லாம்.

 நகைச்­சுவை இயற்­கை­யா­கவே நம்மை அமை­திப்­ப­டுத்­து­வ­தால் சிரிக்க மற­வா­தீர்.

 உடல் ஆரோக்­கி­யத்­தில் கவ­னம் செலுத்­த­வேண்­டும். போதிய தூக்­க­மும் ஆரோ­யக்­கிய உண­வு­மு­றை­யும் முக்­கி­யம்.

 எதிர்­கா­லத்­தைப் பற்றி யோசிக்­கா­மல் இந்­தத் தரு­ணத்­தில் மட்­டும் கவ­னம் செலுத்தி உணர்ச்சி­களைக் கட்­டுப்­ப­டுத்த முயற்சி செய்­யுங்­கள்.

 வெவ்­வேறு மூச்­சுப் பயிற்­சி­களைக் கையாண்டு மன அழுத்­தத்­தைக் குறைக்­க­லாம்.

வாழ்க்கைமுறையில் மாற்றங்கள் செய்வதன் வழியாகவும் ஒருவர் தமக்கு ஏற்படும் உணர்ச்சிகளைச் சிறந்த முறையில் கையாளலாம்.