அதிகச் செயற்கை இனிப்பும் இதயநோய் கூடும் அபாயமும்

சர்க்­கரை உள்ள சுவை பானங்­களும் காப்­பி­யும் தேநீ­ரும் உட­லுக்­குக் கெடுதி என்று நினைத்து, செயற்கை இனிப்­பைப் பயன்­ படுத்து­ப­வர்­கள் உண்­மை­யில் தங்­க­ளின் உட­லுக்கு நன்மை செய்­ய­வில்லை என்று அண்­மைய ஆய்வு ஒன்று கூறி­யுள்­ளது.

செயற்கை இனிப்­பால் பாதிப்­பில்லை என்­றும் சர்க்­க­ரை­யைப் போல அதில் கலோ­ரி­கள் இல்லை என்றும் பல­ரும் நம்பி வந்­துள்­ள­னர். ஆனால் அவை உடல் பரு­மனை அதி­க­ரிப்­ப­து­டன், மூளை­யில் கட்டி, புற்­று­நோய் உள்­ளிட்ட பிரச்­சி­னை­க­ளுக்கு இட்­டுச்­செல்­லும் என்று ஏற்­கெனவே பல ஆய்வு­கள் கூறி­யுள்­ளன.

இப்­போது பிரான்­சில் நடத்­தப்­பட்ட ஆய்வு ஒன்று, செயற்கை இனிப்பை அதி­கம் உட்­கொண்­ட­வர்­க­ளி­டம் இத­ய­நோய் அதி­கம் காணப்­பட்­ட­தா­கக் கூறி­யது.

செயற்கை இனிப்பை உட்­கொள்­பவர்களுக்கு வாத­நோய் ஏற்­படும் அபா­யமும் அதிகரிப்பதாக ஆய்­வா­ளர்­கள் கூறி­னர்.

ஃபிரான்­சைச் சேர்ந்த 18 வய­துக்கு மேற்­பட்ட 100,000 பேர் இந்த ஆய்­வில் கலந்­து­கொண்­ட­னர். இன்­சர்ன் நிலை­யத்­தின் ஆய்­வா­ளர்­கள் நடத்­திய ஆய்­வின் முடி­வு­கள் கடந்த வியா­ழக்­கி­ழமை பிரிட்­டிஷ் மருத்­துவ ஆய்­வி­த­ழில் வெளி­யி­டப்­பட்­டன.

ஆய்­வில் பங்­கேற்­ற­வர்­க­ளின் சரா­சரி வயது 42 ஆகும். அவர்­களில் சுமார் 80 விழுக்­காட்­டி­னர் பெண்­கள். அவர்களின் உணவு, வாழ்க்கை முறை ஆகி­ய­வற்­று­டன் 2009ஆம் ஆண்­டுக்­கும் 2021க்கும் இடைப்­பட்ட அவர்­க­ளின் உடல் ­ந­லமும் ஆரா­யப்­பட்­டது.

ஆய்வு தொடங்­கி­ய­போது 37 விழுக்­காட்­டி­னர் தாங்­கள் செயற்கை இனிப்பை சாப்­பி­டு­வ­தாகக் கூறி­னர். அவர்­கள் பெரும்­பா­லும் அதிகம் உடற்­ப­யிற்சி செய்­யா­த­வர்­கள். உடல் எடை­யைக் குறைக்க உண­வைக் கட்­டுப்­ப­டுத்த முயன்­ற­வர்­கள்.

பங்­கேற்­பா­ளர்­களை ஆய்­வா­ளர்­கள் கண்­கா­ணித்து வந்த 9 ஆண்­டு­களில், இத­யநோய் அல்­லது அதன் தொடர்­பான நோய்­கள் 1,500க்கும் அதி­க­மான முறை ஏற்­பட்­டது. மார­டைப்பு, வாதம், இத­யக் குழாய் அடைப்பு, நெஞ்சு வலி போன்­றவை அவற்­றில் அடங்­கும்.

செயற்கை இனிப்பு, சர்க்­க­ரைக்குப் பாது­காப்­பான மாற்று எனக் கூற­மு­டி­யாது என்று கூறிய உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் அறிக்­கைக்கு ஏற்ப இந்த ஆய்வு முடி­வு­கள் உள்­ள­தாக முதன்மை ஆய்­வா­ளர் மத்­தில்ட் டூவியே கூறி­னார்.

இருப்­பி­னும் செயற்கை இனிப்பு உட்­கொள்­வ­தன் விளை­வா­கத்­தான் இத­ய­நோய் ஏற்­ப­டு­வ­தாக ஆய்வு முடிவு உறு­தி­யா­கக் கூற­வில்லை என்று அவர் குறிப்­பிட்­டார்.

இவ்­வாண்டு வெளி­யி­டப்­பட்ட வேறோர் ஆய்வு, சுக்­ர­லோஸ், ஏஸ்­ஸல்­ஃபேம் பொட்­டா­சி­யம், அஸ்­பார்­டம் போன்ற செயற்கை இனிப்­பு­க­ளுக்­கும் புற்­று­நோய்க்­கும் இடையே தொடர்பு இருந்­த­தா­கக் கண்­ட­றிந்­தது.

ஆனால் செயற்கை இனிப்­பு­, இது போன்ற நோய்­க­ளுக்­குக் கார­ணம் என்று இத்தகைய ஆய்­வு­கள் உறுதிப்பட கூறா­த­தால் அவை குறை­கூ­றப்­பட்டு வரு­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!