பெண்களால், பெண்களுக்காக

பெண்களால், பெண்களுக்காக

1 mins read
441e4334-1e00-4944-bfbc-1d827156ad35
தமது உணவகத்தைப் பெண்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் உணவு உண்டு மகிழும் இடமாக உருவாக்கி உள்ளதாக அமினா கூறினார். படம்: ராய்ட்டர்ஸ் -

காஸா: பாலஸ்­தீ­னத்தின் காஸா­பகுதியில் உள்ள புதிய கஃபே உண­வ­கத்­தில் எப்­போ­தும் நல்ல கூட்­டம். பர­ப­ரப்­பு­டன் காணப்­படும் அந்த உண­வ­கத்­தின் உரி­மை­யா­ளர் ஒரு பெண். அதன் ஊழி­யர்­களும் வாடிக்­கை­யா­ளர்­களும் பெண்­கள்­தான்.

'சபாயா விஐபி' எனும் அந்த உண­வ­கத்தை அமினா அல் ஹயாக் என்­ப­வர் ஒரு மாத­மாக நடத்தி வரு­கி­றார். சமை­யல் நிபு­ண­ராக வேண்­டும் என்ற நோக்­கத்­தில் ஹோட்­ட­லில் இல­வ­ச­மாக வேலை செய்து தொழி­லைக் கற்­றார்.

அந்த ஹோட்­ட­லில் சமை­யல் நிபு­ணர்­க­ளுக்கு தேவை இருந்­த­போ­தும், திரு­வாட்டி அமி­னா­வுக்கு வாய்ப்பு தரப்­ப­ட­வில்லை. தங்­க­ளுக்கு ஆண்­ ஊழியர்கள் மட்­டுமே வேண்­டும் என்­றும் பெண்­களுக்கு இட­மில்லை என்றும் ஹோட்­டல் நிர்­வா­கம் கூறி­விட்டது.

மனந்­த­ள­ராத அமினா சொந்த மாக உண­வ­கத்­தைத் திறந்து பல­ருக்கும் வேலை தந்­தார். எட்டு பெண்­களை வேலை­யில் சேர்த்தார்.

வேறு சில பெண்­களும் உண­வ­கத்­துக்­குச் சமைத்­துத் தரு­கின்­ற­னர். வேலை­யின்மை அதி­கம் உள்ள காஸா­வில் வேலை வாய்ப்­பு­களை உரு­வாக்­கி­ய­தில் மகிழ்­வ­தாக அமினா கூறி­னார்.

அத்­து­டன், காஸா­வில் பெண்­ க­ளுக்­கான பாது­காப்பான பொழுது­ போக்­குத் தலங்­கள், உண­வ­கங்­கள் இல்லை எனும் குறைக்கு உண­வ­கம் தீர்­வாக அமைந்­துள்­ளது.