இலவச ஐஸ்கிரீம் பெறலாம்

இலவச ஐஸ்கிரீம் பெறலாம்

1 mins read
Google News Preferred Icon

ஐஸ்கிரீம் பிரியர்களுக்கு நல்ல வாய்ப்பு.

ராஃபிள்ஸ் கிரீன், சிலிகி ரோடு, ஆர்ச்சர்ட் ரோடு, புகிஸ், செந்தோசா உள்ளிட்ட இடங்களில் வரும் 15ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை இலவச ஐஸ்கிரீம் வழங்கப்பட உள்ளது.

'ஆக்டிவிஷன் பிலிஸர்ட்' எனும் வீடியோ விளையாட்டு நிறுவனம், சிங்கப்பூரில் உள்ள நடமாடும் ஐஸ்கிரீம் விற்பனையாளர்களுடன் அதற்காக கூட்டு சேரவுள்ளது.

வெவ்வேறு இடங்களில் குறிப்பிட்ட நேரங்களில் ஐஸ்கிரீம் கிடைக்கும். அதனுடன், நிறுவனத்தின் 'கால் ஆஃப் டியூட்டி: மாடர்ன் வார்ஃபேர்' எனும் 'பிளேஸ்டஷன்' விளையாட்டின் 'பேட்டா' வடிவத்தை விளையாடிப் பார்ப்பதற்கான குறியீடுகளும் அப்போது வழங்கப்படும்.

ஐஸ்கிரீம் கிடைக்கவுள்ள இடங்களின் விவரங்களை 'கால் ஆஃப் டியூட்டி தென்கிழக்காசியா' ஃபேஸ்புக் பக்கத்தில் பெறலாம்.