உலகின் சிறந்த பட்டம் விடும் விழாக்கள்

உலகின் சிறந்த பட்டம் விடும் விழாக்கள்

1 mins read

உல­கின் ஆகப் பெரிய பட்­டம் விடும் விழா சீனா­வின் வெய்­ஃபாங் நக­ரில் ஒவ்­வோர் ஆண்­டும் நடை­பெ­று­கிறது. கொவிட்-19 தொற்­றால் அது வரும் 24ம் தேதிக்­குத் தள்ளி வைக்­கப்­பட்­டுள்­ளது.

அக­ம­த­ாபாத் அனைத்­து­லக பட்­டம் விடும் விழா­வும் மிக­வும் புகழ்­பெற்­றது. ஜன­வ­ரி­யில் நடக்­கும் அவ்­வி­ழா­வில் பல்­லா­யி­ரம் பேர் கலந்­து­கொள்­வர்.

பாலி பட்­டம் விடும் விழா­வும் உல­கப் புகழ்­பெற்­றது. சனுர் கடற்­ க­ரை­யில் ஒவ்­வோர் ஆண்­டும் அது நடத்­தப்­படும்.

சிட்னி பட்­டம் விடும் விழா 40 ஆண்­டு­க­ளுக்கு மேலாக நடத்­தப்­பட்டு வரு­கிறது. விழா நடை­பெ­றும் போண்டி கடற்­க­ரை­யில் பட்­டம் செய்­யும் பயி­ல­ரங்­கு­களும் உண்டு.

பிரிஸ்­பேன் நக­ரத்­தில் நடைபெறும் பட்­டம் விடும் விழா­ குடும்பங்கள் மகிழும் நிகழ்வு.

பிரான்­சில் நடை­பெற்று வரும் டியேப்பே அனைத்­து­ல­கப் பட்­டம் விடும் விழா­வில் தலைசிறந்த ஓவியங்களும் வடிவமைப்பும் உள்ள பட்டங்களைப் பார்க்கலாம்.