உணவுவகைகளுக்கும் பானங் களுக்கும் சுவை கூட்டும் பனைவெல்லத்துக்கு பல மருத்துவப் பண்புகள் உண்டு. ஆயுர்வேதத்திலும் சித்த மருத்துவத்திலும் வெல்லம் காலம் காலமாகப் பயன்பட்டு வந்துள்ளது.
வெள்ளை அல்லது பழுப்புநிறச் சர்க்கரையைத் தயாரிக்கும்போது சேர்க்கப்படும் ரசாயனங்கள் வெல்லத்தில் சேர்க்கப்படுவதில்லை.
அதனால் வெல்லத்தில் இயற்கை யாக உள்ள சத்துகள் அழிக்கப் படுவதில்லை.
வெல்லத்தில் அதிக நார்ச்சத்து உண்டு. அது உணவுக் குழாய், வயிறு, நுரையீரல் என உடலின் உள் உறுப்புகளை சுத்தம் செய்யக் கூடியது. அதனால்தான் உணவு உண்டபிறகு ஒரு துண்டு வெல்லம் சாப்பிடும் பழக்கம் இருந்தது.
வயிற்றில் உள்ள செரிமானத் திரவங்களைத் தூண்டிவிட்டு, சீரணத்தை சரி செய்யும் ஆற்றல் வெல்லத்துக்கு உண்டு.
சர்க்கரை சேர்த்துக் கொள்ளும்போது வயிற்றில் அமிலத்தன்மை கூடும். வெல்லம் சேர்த்துக் கொள்வோருக்கு பெரும்பாலும் இந்தப் பிரச்சினை வருவதில்லை.
பனை வெல்லம், ரத்தத்தை சுத்தப்படுத்தக் கூடியது. பனைவெல்லத்தில் இரும்புச் சத்து, கால்சியம், செலினியம், மெக்னீசியம் போன்ற போன்றவை அதிகமாக உள்ளன. பி1, பி2, பி3, பி6 பி12 ஆகிய சத்து களும் அதில் உள்ளன.
வெல்லம் அழற்சியை எதிர்க்கும் தன்மை கொண்டது. பனை வெல்லம், நெய், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து உட்கொண்டால் தசை வலி, மூட்டு வலி போன்றவை குறையும் என்று ஆயுர்வேத மருத்து வத்தில் கூறப்பட்டது.
கல்லீரலை சுத்தப்படுத்தவும் மலச்சிக்கலைத் தீர்க்கவும் உடலுக்கு சக்தி அளிக்கவும் வெல்லம் உதவுவதாகக் கூறப்படுகிறது.
பெண்களுக்கு இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம் ஆகியவை அதிகம் தேவை. இவை மூன்றையும் கொண்டது வெல்லம். மாதவிடாய் தொடங்கிய பெண்களுக்கு வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்த உளுத்தங்களி கொடுப்பது இதனால்தான்.
கருவுற்ற பெண்கள் எடையை அதிகம் கூட்டாமல், அதே நேரம் உடலுக்கு வலுகொடுக்க, என்ன இனிப்பு கொடுத்தாலும் அதில் வெல்லம் சேர்ப்பார்கள்.
பிரசவத்துக்குப் பிறகு, பெண் களின் உடலில் தேங்கியிருக்கும் அழுக்குகளை அகற்ற, கருஞ்சீரகமும் கருப்பட்டியும் சேர்த்துச் செய்த உருண்டையைப் பிரசவ மருந்தாகக் கொடுப்பதுண்டு. அதைக் கொடுத்தால் உடனே ரத்தப்போக்கு உண்டாகி அழுக்கு வெளியேறும்.
அளவுக்கு மீறினால் வெல்லமும் கெடுதல் தரும். என்னதான் நற்குணங்கள் இருந்தாலும் வெல்லமும் சர்க்கரைதான். அதிகப்படியாக அதை உட்கொண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடும். உடல் பருமன் கூடும் அபாயமும் உள்ளது. அத்துடன், அளவுக்கு அதிகமாக வெல்லம் சில வகை ஒவ்வாமைகளையும் அசீரணத்தையும் ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.


