இடுப்பு எலும்பு முறிவு 2050ல் இரட்டிப்பாகும்

இடுப்பு எலும்பு முறிவு 2050ல் இரட்டிப்பாகும்

1 mins read

பெரும்­பா­லான நாடு­களில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்­படும் சம்­ப­வங்­கள் 2005ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை குறைந்து வந்­தன.

ஆனால் அத்­த­கைய சம்­ப­வங்­கள் வரும் 2050ஆம் ஆண்­டுக்­குள் ஏறத்­தாழ இரட்­டிப்­பா­கும் என்று ஒரு புதிய ஆய்வு கூறி­யுள்­ளது.

ஹாங்­காங் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் ஆய்­வா­ளர்­கள் மேற்­கொண்ட ஆய்­வின் முடி­வு­கள், அண்­மை­யில் அமெ­ரிக்க எலும்பு, தாதுப்­பொ­ருள் ஆய்­வுச் சங்­கத்­தில் படைக்­கப்­பட்­டன.

உலக மக்­கள்­தொகை மூப்­ப­டைந்து வரும் நிலை­யில் இடுப்பு எலும்பு முறி­வுச் சம்­ப­வங்­களும் அதி­க­மா­கும் என்று ஆய்­வில் கூறப்­பட்­டது.

அது­வும் 85 வயது அல்­லது அதற்­கும் மேற்­பட்­ட­வர்­க­ளி­டையே இடுப்பு எலும்பு முறிவு நான்­கரை மடங்கு அதி­க­மா­கும் என்­றும் குறிப்­பாக பெண் களை­விட ஆண்­களே பாதிக்­கப்­படும் சாத்­தி­யம் அதி­கம் என்று ஆய்வு தெரி­வித்­தது.

பெண்­க­ளை­விட ஆண்­கள் இடுப்பு எலும்பு முறிவு ஏற்­பட்ட ஓராண்­டுக்­குள் இறக்­கும் அபா­ய­மும் அதி­கம் என்­றும் கூறப்­பட்­டது.

இடுப்பு எலும்பு முறி­வுக்கு ஓராண்டு ­கால சிகிச்சை தேவைப்­ப­டு­கிறது என்­றும் தற்­போது பல நாடு­களில் பாதிக்­கும் குறை­வா­ன­வர்­களே ஓராண்­டுக்கு சிகிச்சை பெறு­கின்­ற­னர் என்­றும் ஆய்வு கூறி­யது.

இடுப்பு எலும்பு முறி­வைத் தடுக்­க­வும் அவற்­றுக்கு சிகிச்சை அளிக்­கும் புதிய வழி­க­ளைக் காண­வும் அர­சாங்­கங்­களும் மருத்­து­வத் துறை­யும் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று ஆய்­வுக்கு தலைமை ஏற்ற டாக்­டர் சிங் சோர்-விங் கூறி­னார்.