ஓர் இடத்தில் பலர் நின்றிருக்க, கொசுக்கள் உங்களை மட்டும் குறிபார்த்துத் தாக்கும் நிலைமை உங்களுக்கு ஏற்பட்டதுண்டா?
பொதுவாக, இனப்பெருக்க சுழற்சியை முடித்துக்கொள்ள பெண் கொசுக்களுக்கு ரத்தம் தேவைப்படுகிறது.
இதற்காக கரியமிலவாயு அதிகம் உற்பத்தியாகும் இடங்களை அவை நாடும். இதனால்தான் ஓட்டப் பயிற்சியை முடித்தவர், கர்ப்பிணிகள் ஆகியோரின் வளர்சிதை மாற்ற (metabolic) விகிதம் அதிகரித்த வண்ணம் இருப்பதால் அவர்களைக் கொசுக்கள் குறிவைப்பதுண்டு.
ஒருவரின் உடலிலிருந்து வரக்கூடிய வாசனையும் கொசுக்களை ஈர்க்கக்கூடும்.
கறுமை நிறத்தில் ஆடை அணிவோரையும் கொசுக்கள் குறிவைக்கும் சாத்தியம் அதிகம். அத்துடன் வெளிர் நிறங்களில் உடை அணிவதால் நம் உடலும் எளிதில் வெப்பமடையாது.
'பீர்' வகை மதுவைக் குடிப்போரையும் கொசுக்கள் அதிகம் தாக்குவதாகச் சில ஆய்வுகள் கூறுகின்றன.
கொசுக்கள் 'ஓ' வகை ரத்தம் கொண்டோரையும் நாடிச் செல்வதாக நம்பப்படுகிறது.
இவ்வளவும் அறிந்து நாம் கவனமாக இருந்தாலும் ஏடிஸ் கொசுக்கள் நம் கணுக்காலையே அதிகம் குறிவைத்துக் கடித்துத் தப்பிவிடுகின்றன.