அண்மைய காலமாக பெண்கள் அதிகமானோர் மகப்பேறு தொடர்பான புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
விழிப்புணர்வும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மட்டுமே இந்த அதிகரிக்கும் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியும்.
முதலில், மகப்பேறு தொடர்பான புற்றுநோய்கள் என்றால் என்ன என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும்.
ஒரு பெண்ணின் ஒட்டுமொத்த இனப்பெருக்கப் பகுதியில் ஏற்படக்கூடியவையே மகப்பேறு தொடர்பான புற்றுநோய்கள்.
கருப்பை (uterus), ஃபெலோபியன் (fallopian) குழாய்கள், கருமுட்டைகள் (ovaries), பிறப்புறுப்பு (vagina), கருவாய் (vulva) போன்றவை இந்தப் பகுதியில் அடங்கும்.
உடல் பருமன், புகை பிடித்தல், பாதுகாப்பற்ற வகையில் பாலியல் செயல்களில் ஈடுபடுதல், போதைப்பொருள் உட்கொள்ளுதல் மற்றும் மதுபானம் அருந்துதல் ஆகியவற்றால் இவ்வகை புற்றுநோய்கள் ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கிறது.
உணவுமுறையில் மாற்றம், உடற்பயிற்சி ஆகியவற்றால் உடல் பருமனைக் குறைக்கலாம்.
வாரத்தில் ஐந்து நாள்களில் 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்யலாம். தினமும் எட்டு மணிநேர உறக்கம் அவசியம்.
முக்கியமாக, மருத்துவப் பரிசோதனைக்குச் செல்வது முக்கியம். 'பேப் ஸ்மியர்' (Pap Smear) பரிசோதனைகளுக்கு அடிக்கடி செல்வதன்வழி கர்ப்பப்பை வாய் (cervical) நோய் இருப்பதைக் கண்டறியலாம்.

