திறன்பேசியும் நினைவுத்திறனும்

திறன்பேசியும் நினைவுத்திறனும்

2 mins read
0aabcfce-2186-4fc4-8397-e5fb725d75f5
கோப்புப் படம்: இணையம் -
Google News Preferred Icon

திறன்பேசிகள் மற்றும் 'ஸ்மார்ட் வாட்ச்­' எனப்படும் நவீன கைக்கடிகாரங்கள் மற்­றும் பிற மின்னிலக்கச் சாத­னங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தன் மூலம் ஒரு­வ­ரின் நினைவுத்திறனை மேம்­ப­டுத்த முடி­யும் என அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

மின்­னணு சாத­னங்­கள் மனி­த­வாழ்­வின் ஒரு பகு­தி­யா­கி­விட்­டன. இனி இது­போன்ற சாத­னங்­கள் இல்­லாத ஒரு வாழ்க்­கையை நினைத்­துக்­கூ­டப் பார்க்க முடி­யாத அளவுக்கு அவற்றின் ஆக்கிரமிப்பு உள்ளது.

இருப்­பி­னும், திறன்­பே­சி­க­ளால் சாத­க­மான அம்­சங்­கள் எந்த அள­வுக்கு இருக்­கின்­ற­னவோ அந்த அள­வுக்­குப் பாத­கங்­களும் இருக்­கின்­றன.

ஆனால், பய­னுள்ள வகை­யில் பயன்­ப­டுத்­தி­னால் தக­வல் தொடர்­புக்­கா­க­வும் இதர பயன்­பாட்­டுக்­கா­க­வும் திறன்­பே­சி­கள் பெரி­தும் கைகொ­டுத்து உத­வு­கின்­றன.

இந்­நி­லை­யில் திறன்­பே­சி­க­ளைப் பயன்­ப­டுத்­து­வது நினை­வுத்­தி­றனை அதி­க­ரிக்­கும் என வாஷிங்­ட­னின் 'யுனி­வர்­சிட்டி காலேஜ் ஆஃப் லண்­டன்' பல்­க­லைக்­க­ழக ஆய்­வா­ளர்­கள் கண்­ட­றிந்­துள்­ள­னர்.

இந்த ஆய்­வின் முடி­வு­கள் 'ஜர்­னல் ஆஃப் எக்ஸ்­பெ­ரி­மெண்­டல் சைகா­லஜி' என்­னும் சஞ்­சி­கை­யில் வெளி­யி­டப்பட்­டுள்­ளன.

மின்­னி­லக்­கச் சாத­னங்­கள் மக்­க­ளுக்கு மிக முக்­கி­ய­மான தக­வல்

களைச் சேமிக்­க­வும் நினை­வில்­கொள்­ள­வும் உத­வு­கின்­றன.

மிக­வும் அவ­சி­ய­மான தேவை­களை சரி­யான நேரத்­தில் அவை நினை­வூட்­டச் செய்­கின்­றன.

மேலும், நினை­வாற்­றல் குறித்து சோதிக்க ஒரு சோதனை நடத்­தப்­பட்­டது. 18 முதல் 71 வய­துக்­குட்­பட்ட 158 தொண்­டூ­ழி­யர்­கள் இந்­தச் சோத­னைக்­குப் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

தொடு­திரை கைக்­க­ணினி அல்­லது கணி­னி­யில் எண்­ணி­டப்­பட்ட 12 வட்­டங்­கள் கொடுக்­கப்­பட்டு அவற்­றில் சில­வற்றை இட­து­பு­ற­மா­க­வும் வல­து­பு­ற­மா­க­வும் இழுக்க நினை­வில்­கொள்ள வேண்­டும்.

சரி­யா­கச் செய்­ப­வர்­க­ளுக்கு பரி­சுத் தொகை வழங்­கப்­படும் என்று அறிவிக்­கப்­பட்­டது. இதில் பாதியை அவர்­கள் நினை­வில் வைத்­துக்­கொள்ள வேண்­டும். மீதியை திறன்­பே­சி­யில் நினை­வூட்­டல்­க­ளாக சேமித்து வைத்­துக்­கொள்­ள­லாம்.

போட்­டி­யின்­போது திறன்­பே­சி­யில் சேமித்து வைத்­தி­ருந்­த­தை­வி­ட­விட சுய­மாக நினை­வில் வைத்­தி­ருந்­ததை அதில் பங்­கேற்­ற­வர்­கள் மீண்­டும் மீண்­டும் நினை­வு­ப­டுத்­திக்­கொண்­ட­னர்.

இவ்­வாறு திறன்­பே­சி­யின் நினை ­வ­கத்­தை­யும் சுயநினை­வை­யும் மாற்றி மாற்­றிப் பயன்­ப­டுத்­தும்­போது நினை­வுத்­தி­றன் அதி­க­ரித்­தது கண்­ட­றி­யப்­பட்­ட­தாக ஆய்­வா­ளர்­கள் தெரி­வித்­த­னர்.

மேலும், முக்­கிய நிகழ்­வு­களை திறன்­பே­சி­யில் சேமித்து வைத்த பின்னர் அந்தக் தக­வல்கள் தொடர்ந்து நினை­வூட்­டப்­ப­டும்­போது நாள­டை­வில் மன­தில் ஆழ­மா­கப் பதிந்­து­வி­டு­வ­தும் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக அவர்­கள் கூறி­னர்.