‘ஆயிரம் பொற்காசுகள் சொக்கா...’: பிழை காண்போருக்கு வெகுமதி

ஆப்­பிள், கூகல், மைக்­ரோ­சா­ஃப்ட், ெமட்டா மற்­றும் அமே­சான் போன்ற பெரு­நி­று­வ­னங்­கள் தாங்­கள் வெளி­யிட இருக்­கும் புதிய செய­லி­கள், சேவை­கள் அல்­லது இயங்­கு­மு­றை­கள் தொடர்­பான பிழை­கள் மற்­றும் பாது­காப்­புக் குறை­பா­டு­க­ளைக் கண்­ட­றிந்து தெரி­விப்­போ­ருக்கு அந்­நி­று­வ­னங்­கள் வெகு­மதி வழங்­கும். இதற்கு, பக் பவுண்டி (Bug bounty) எனப்­படும்.

பொது­வாக, இந்­தத் தயா­ரிப்­பு­களை பிழை கண்­ட­றிய தொழில்­நுட்ப நிபு­ணர்­கள், ஆராய்ச்­சி­யா­ளர்­கள் மற்­றும் தொழில்­முறை இணைய ஊடு­ரு­வி­க­ளி­டம் இந்­நி­று­வ­னங்­கள் வழங்­கும். எந்­த­வொரு மென்­பொ­ரு­ளும் அல்­லது செய­லி­யும் வெளி­யி­டப்­ப­டு­வ­தற்கு முன்­னர் தவ­ற­விட்ட சில பிழை­க­ளைக் கண்­ட­றிய இந்த வழி­முறை பல நிறு­வ­னங்­க­ளுக்கு உத­வு­கிறது. அந்த வகை­யில், கூகல் நிறு­வ­னத்­தின் 'ஓப்­பன் சோர்ஸ்' மென்­பொ­ருள் பிழை­க­ளைக் கண்­ட­றி­வ­தற்­கான திட்­டத்தை (OSS VRP) தொடங்க இருப்­ப­தாக அந்­நி­று­வ­னம் கூறி­யுள்­ளது.

வெகு­ம­தித் திட்­டங்­களில் (VRPs) கூக­லின் OSS VRPஐச் சேர்ப்­ப­தன் மூலம், முழு அள­வி­லான திறந்த மூல சுற்­றுச்­சூ­ழல் அமைப்பை உரு­வாக்­க­மு­டி­யும். மேலும் பாதிக்­கக்­கூ­டிய பிழை­க­ளைக் கண்­ட­றி­வ­தற்­காக ஆராய்ச்­சி­யா­ளர்­க­ளுக்கு செயல்­முறை வெகு­ம­தி­களும் வழங்­கப்­ப­டு­வ­தாக கூகல் தனது வலைப்­ப­தி­வில் தெரி­வித்­துள்­ளது.

இந்த பக் பவுண்டி திட்­ட­மா­னது Fuchsia, Golang மற்­றும் Angular போன்ற திறந்த மூல திட்­டங்­க­ளுக்­கா­னது என்­றும் அது குறிப்­பிட்­டுள்­ளது

பிழை­க­ளின் தீவி­ரம் மற்­றும் திட்­டத்­தின் முக்­கி­யத்­து­வத்­தைப் பொறுத்து, வெகு­ம­தி­கள் US$100 வரை இருக்­கும். வழக்­கத்­திற்கு மாறான, சுவா­ரஸ்­ய­மான பிழை­க­ளுக்கு பெருந்­தொகை வழங்­கப்­படும். எனவே இதன்­மூ­லம் ஒரு­வ­ரின் படைப்­பாற்­றல் ஊக்­கு­விக்­கப்­ப­டு­வ­தா­க­வும் கூகல் கூறி­யுள்­ளது.

கூகல் அதன் தற்­போ­தைய 'பக் பவுண்டி' திட்­டங்­கள் மூலம், 84க்கும் மேற்­பட்ட நாடு­களில் உள்ள பிழை கண்­டு­பி­டிப்­பா­ளர்­க­ளுக்கு (பக் ஹண்ட்­டர்ஸ்) வெகு­ம­தி­களை அளித்­துள்­ளது.

இது­வரை ஒட்­டு­மொத்­த­மாக, இந்த திட்­டங்­கள் மூலம் 13,000க்கும் மேற்­பட்ட சமர்ப்­பிப்­பு­க­ளுக்கு வெகு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. அதா­வது இதன் மொத்த வெகு­மதி US$38 மில்­லி­யன் எனக் கூகல் நிறு­வ­னம் கூறி­யுள்­ளது.

தொழில்­நுட்ப சிக்­கல் தீர்க்­கும் திறன்­ப­டைத்­த­வர்­கள் கூக­லின் இந்த வாய்ப்­பைப் பயன்­ப­டுத்தி வெகு­மதி பெற­லாம். ஆர்­வ­முள்­ள­வர்­கள் கூகலின் இந்த சிறந்த வாய்ப்பை பயன்­ப­டுத்தி வெகு­ம­தி பெற முயலலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!