இணைய ஊடுருவலில் இருந்து தப்பிக்க நச்சுனு நாலு யோசனை

இணைய ஊடுருவலில் இருந்து தப்பிக்க நச்சுனு நாலு யோசனை

2 mins read
e063bb4d-1afb-4263-8be6-5b1f32d2076c
-
Google News Preferred Icon

இணைய மோசடி மற்றும் ஊடுருவல்களில் இருந்து தப்பிக்க எவ்வளவோ வழிகள் இருந்தாலும் சில முக்கிய யோசனைகளை இங்கு பார்க்கலாம்.

முதலில், Haveibeenpwned என்ற 'டூல்'ஐ பயன்­ப­டுத்தி உங்­கள் மின்னணு சாதனத்தில் உள்ள தக­வல்­கள் திருடப்பட்டு உள்ளனவா அல்­லது திருட முயற்சி நடந்­துள்­ளதா என்­பதை அறிந்துகொள்­ள­லாம். ஒருவேளை திருடப்பட்டி ருந்தால் எந்த மாதிரியான தகவல்கள் திருடப் பட்டன என்பதையும் அறியலாம்.

டுவிட்­டர் மற்­றும் ஃபேஸ்புக்­கில் எப்­போதோ பகிர்வு செய்த தேவை­யில்­லாத பதி­வு­கள், மதிப்பை குறைக்­க­கூ­டிய புகைப்­ப­டங்­கள் ஆகி­ய­வற்றை நீக்­கு­வது நல்­லது. டுவிட்­டைப் பொறுத்­த­வரை பழைய டுவிட் மற்­றும் புகைப்படங்களை மொத்­த­மாக நீக்கமுடி­யாது என்­றா­லும் சில செய லிகள் மற்­றும் மூன்­றாம்தரப்பு சேவை­க­ளைப் பயன்­ப­டுத்தி அவற்றை நீக்­க­லாம். நீண்டநாட்­

க­ளாகப் பயன்­பாட்­டில் இல்­லாத மின்னஞ்சல் முகவரி, இணைய வர்த்தகக் கணக்குகள் மற்றும் சமூக ஊடகக் கணக்குகளை Shift+Delete கொடுத்து நிரந்­த­ர­மாக நீக்கிவிடுங்கள்.

கணினி, மடிக்கணினி மற்றும் நவீன கைபேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை அவ்வப்போது 'அப்டேட்' செய்யுங்கள். பாது­காப்பு மென்­பொ­ருள், தேடுபொறிக்கான 'டூல்'கள் ஆகி­ய­வற்றை அவ்­வப்­போது புதுப்­பித்­துக்­கொள்­வது இணைய ஊடுருவிகள் அவற்றில் உள்ள பாது­காப்புக் குறைபாடுகளைப் பயன்­ப­டுத்தி 'ஹேக்' செய்­வதைத் தடுக்க உத­வும்.

வங்கிக் கணக்குகள், தனிப்பட்ட தகவல்கள், முக்கிய ஆவணங்கள், சொத்து விவரங்கள் போன்ற முக்கிய தகவல்களை கணினி, மடிக்கணினி, கைபேசி, மின்னஞ்சல் போன்ற வற்றில் சேமிப்பதற்குப் பதிலாக 'பென் டிரைவ்', 'ஹார்ட் டிஸ்க்' போன்ற கருவிகளில் சேமித்து வைப்பது இணைய ஊடுருவிகளின் கைகளில் சிக்காமல் கூடுதல் பாதுகாப்பைத் தரும்.