கூகல் நிறுவனம் வருகிற அக்டோபர் 6ஆம் தேதி பிக்சல் 7 திறன்பேசி மற்றும் அதன் முதல் ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்த உள்ளது. ஆல்ஃபபெட் குழுமத்துக்குச் சொந்தமான கூகல் நிறு வனம் பிக்சல் என்னும் பெயரில் திறன்பேசிகளை சந்தைப்படுத்தி வருகிறது. கைபேசியை இந்
நிறுவனம் அறிமுகம் செய்த காலத்தில் பல விமர்சனங்களை எதிர்கொண்டாலும்கூட அடுத்தடுத்த பிக்சல் தொடரிலான திறன்பேசிகளை வெளியிட்டு வருவதன் மூலம் தனக்கென தனி பயனாளர்களைக் கொண்டுள்ளது கூகல்.
இந்த நிலையில் பிக்சல் தொடரின் அடுத்த ெவளியீடான பிக்சல் 7 திறன்பேசியை வருகிற அக்டோபர் 6ஆம் தேதி அறிமுகப்படுத்தவுள்ளதாக தனது 'GoogleStore.com' இணையப் பக்கத்தில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த திறன்பேசியுடன் கூகல் தனது முதல் 'ஸ்மார்ட் வாட்ச்' ஐயும் அறிமுகப்படுத்துகிறது. கூகல் சாதனங்களின் வெளியீட்டு நிகழ்வு நியூயார்க்கில் உள்ள வில்லியம்ஸ்பர்க் வளாகத்தில் அக்டோபர் 6 அன்று அமெரிக்க நேரம் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. கூகல் அதன் மே மாத அறிவிப்பின்போது பிக்சல் 7 திறன்பேசி மற்றும் மற்றும் பிக்சல் வாட்ச் தொடர்பான படங்களை வெளியிட்டிருந்தது.
கூகல் வாட்ச் குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "முதல் முறையாக கூகலின் உதவியோடு, ஃபிட்பிட் நிறுவனத்தின் சுகாதார நிபுணத்துவத் தொழில்நுட்பத்தை ஒன்றாகக் கொண்டு வருகிறோம். இவை அனைத்தும் புதிய, மறுவடிவமைக்கப்பட்ட 'WearOS' தொழில்நுட்பத்தில் வழங்கப்படும். மேலும் அனைத்து பிக்சல் மற்றும் ஆண்ட்ராய்டு கைபேசிகளிலும், 'பிக்சல் பட்ஸ் புரோ' மற்றும் 'பிக்சல் பட்ஸ் ஏ-சீரிஸ் வயர்லெஸ் இயர்பட்'களிலும் வேலை செய்யும் வகையில் இவை வடி
வமைக்கப்பட்டுள்ளன," என்று தெரிவித்தது.
வரவிருக்கும் பிக்சல் 7 திறன்பேசி ஆண்ட்ராய்டு 13ல் இயங்கும் மற்றும் 'டென்சர்' எனப்படும் கூகலின் தனிப்பயன் கைபேசி சில்லு வகையின் அண்மைய மறுவடிவமைப்பை அது கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் நிகழும் அறிமுக நிகழ்ச்சியில் பிக்சல் 7, பிக்சல் 7 ப்ரோ மற்றும் கூகல் பிக்சல் வாட்ச் ஆகியவற்றோடு சேர்த்து 'நெஸ்ட் ஸ்மார்ட் ஹோம் போர்ட்ஃபோலியோ'வை யும் கூகல் அறிமுகப்படுத்தவுள்ளது.
வெளியாகும் புதிய சாதனங்
களை வாங்க விரும்புபவர்கள் googleStore.com இணையப் பக்கத்தைப் பயன்படுத்தலாம். அறிமுக நிகழ்ச்சியைக் காண விரும்புவர்கள் GoogleStore.com/events என்னும் வலைத்தள பக்கங்களில் நேரலையாகக் காணலாம். மேலும், புதிய சாதனங்கள் குறித்த விவரங்களை @madebygoogle என்னும் டுவிட்டர் பக்கம் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

