புகைப்பழக்கம் ஒருவரின் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் பாதிக்கக்கூடும்: ஆய்வு

புகைப்பழக்கம் ஒருவரின் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் பாதிக்கக்கூடும்: ஆய்வு

2 mins read

ஒரு­வ­ருக்­குப் புகை­பி­டிக்­கும் பழக்­கம் இருந்­தால் அல்­லது மற்­ற­வர்­கள் புகைப்­ப­தால் வெளி­யா­கும் புகை­யைச் சுவா­சித்­தால் அவ­ரின் பிள்­ளை­களும் பேரப்­பிள்­ளை­களும் ஆஸ்­துமா எனப்­படும் ஈளை நோயால் பாதிக்­கப்­பட அதிக வாய்ப்­புள்­ள­தாக அண்­மைய ஆய்வு முடிவு கூறு­கின்­றது.

இது­கு­றித்த ஆய்­வுக்­கட்­டுரை ஐரோப்­பிய சுவாச சஞ்­சி­கை­யில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

அந்த ஆய்வை மேற்­கொண்ட அனைத்­து­லக விஞ்­ஞா­னி­கள் குழு, புகைப்­ப­தால் ஏற்­படும் தாக்­க­மும் அத­னால் விளை­யும் மூச்சு சார்ந்த பிரச்­சி­னை­களும் அடுத்த இரண்டு தலை­மு­றை­க­ளுக்­குத் தொட­ர­லாம் என்று தெரி­வித்­துள்­ளது.

பிரிட்­டன், ஆஸ்­தி­ரே­லியா, இலங்கை ஆகிய நாடு­க­ளைச் சேர்ந்த பல ஆய்­வா­ளர்­கள் அக்­கு­ழு­வில் இடம்­பெற்­றி­ருந்­த­னர்.

"இன்­னொ­ரு­வர் புகைப்­ப­தன் மூலம் வெளி­யா­கும் புகை­யைச் சிறு­வ­ய­தில் சுவா­சிக்க நேர்ந்­த­வர்­களின் பிள்­ளை­கள் ஒவ்­வா­மை­யில்லா ஆஸ்­து­மா­வால் பாதிக்­கப்­படும் அபா­யம், அவ்­வாறு புகை­யைச் சுவா­சிக்­கா­தோ­ரின் பிள்­ளை­க­ளைக் காட்­டி­லும் 59% அதி­கம் என்­ப­தைக் கண்­ட­றிந்­தோம்.

"அத்­து­டன், புகைப்­ப­ழக்­கம் இருப்­போ­ரின் பிள்­ளை­கள் அந்­நோ­யால் பாதிக்­கப்­பட 72% அதிக வாய்ப்­புள்­ளது," என்று மெல்­பர்ன் பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த திரு­வாட்டி ஜியா­செங்க் லியூ கூறி­னார்.

ஆய்­வின் இணை ஆய்­வா­ள­ரான டாக்­டர் டி புய் கூறு­கை­யில், "புகை­பி­டிப்­ப­தால் ஒரு­வ­ரின் உடல்­நலம் பாதிக்­கப்­படும் என்­ப­தை­யும் அப்­ப­ழக்­கம் அவர்­க­ளின் பிள்­ளை­கள், பேரப்­பிள்­ளை­க­ளி­டத்­தி­லும் எத்­த­கைய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் என்­ப­தை­யும் எங்­க­ளது ஆய்வு முடி­வு­கள் காட்­டு­கின்­றன," என்­றார்.

புகை­பி­டிப்­ப­தால் ஏற்­படும் தீங்­கு­கள், எதிர்­ம­றைத் தாக்­கங்­கள் குறித்து தங்­க­ளது ஆய்வு விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­தும் என்­றும் அவர் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

பதி­னைந்து வய­துக்­கு­முன் புகை­யைச் சுவா­சிக்­கும் பெற்­றோர் மூல­மாக அவர்­க­ளின் பிள்­ளை­களும் பேரக்­கு­ழந்­தை­களும் ஒவ்­வா­மை­யில்லா ஆஸ்­து­மா­வால் பாதிக்­கப்­படும் அபா­யம் அதி­கம் என்­றும் அவர் சொன்­னார்.

வளர்ச்சி சார்ந்த மாற்­றங்­களை மாற்­றி­ய­மைக்­கும் ஆற்­ற­லை­யும் புகைப்­ப­ழக்­கம் கொண்­டுள்­ள­தாக அந்த ஆய்வு குறிப்­பிட்­டது. எதிர்­கா­லத் தலை­மு­றை­யி­ன­ரி­டத்­தில் ஆஸ்­துமா பாதிப்பு அதி­க­ரிக்க அதுவே முக்­கி­யக் கார­ண­மாக இருக்­கும் என்­றும் கூறப்­பட்­டது.