சுற்றுப்பயணிகள் அதிகரித்தாலும் உள்ளூர் மக்களின் வருகையை எதிர்பார்க்கும் செந்தோசா

சுற்றுப்பயணிகள் அதிகரித்தாலும் உள்ளூர் மக்களின் வருகையை எதிர்பார்க்கும் செந்தோசா

2 mins read
3bd01045-c207-4618-abf2-342aa9e44d1e
செந்தோசா தீவின் சிலோசோ கடற்கரையில் அமைந்துள்ள சென்ட்ரல் பீச் பஸார், அண்மையில் திறக்கப்பட்டது. படம்: மவுண்ட் ஃபேபர் லீஷர் குரூப் -

வெளி­நாட்­டுச் சுற்­றுப்­ப­ய­ணி­களை வர­வேற்­கும் அதே­வே­ளை­யில், செந்­தோசா தீவுக்கு சிங்­கப்­பூ­ரர்­களும் தொடர்ந்து வந்­து­செல்­வதை செந்­தோசா மேம்­பாட்டுக் கழ­கம் விரும்­பு­கிறது.

கடந்த ஆண்டு ஏப்­ரல் முதல் இவ்­வாண்டு மார்ச் வரை உள்ளூர்­வா­சி­கள் 9.4 மில்­லி­யன் பேர் செந்­தே­சா­வுக்கு சென்­று­வந்­த­னர். அத்­தீ­வின் 50 ஆண்டு­கால வர­லாற்­றில் இதுவே ஆக அதிக எண்­ணிக்­கை­யா­கும்.

ஒப்­பு­நோக்க, 2020 ஏப்­ரல் முதல் கடந்த ஆண்டு மார்ச் வரை 8.6 மில்­லி­யன் உள்­ளூர்­வா­சி­கள் செந்­தே­சா­வுக்கு சென்­று­வந்­த­னர்.

கொவிட்-19க்கு முந்­தைய சூழலில், ஒவ்­வோர் ஆண்­டும் சரா­சரி­யாக 19 மில்­லி­யன் பேர் செந்­தே­சா­வுக்கு சென்­று­வந்­த­னர். அவர்­களில் கிட்­டத்­தட்ட 80 விழுக்­காட்­டி­னர் வெளி­நாட்­டுப் பயணி­கள் ஆவர்.

சிங்­கப்­பூ­ரில் தற்­போது சுற்­றுப்­ப­ய­ணத்­துறை மீட்­சி­ய­டைந்து வரு­கிறது. கடந்த ஆகஸ்ட்­டில் 728,744 பேர் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து சிங்­கப்­பூர் வந்­த­தாக சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­கத்­தின் ஆக அண்­மைய புள்­ளி­வி­வ­ரங்­கள் காட்­டு­கின்றன.

இந்­தோ­னீ­சியா, இந்­தியா, மலே­சியா, ஆஸ்­தி­ரே­லியா ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து சுற்­றுப்­ப­ய­ணி­கள் இங்கு அதி­கம் வந்­து­சென்­ற­னர்.

இவ்­வாண்டு ஏப்­ர­லில் இருந்து எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் பெரும்பாலும் நீக்­கப்­பட்­டுள்­ள­தைத் தொடர்ந்து, கூடு­த­லான சுற்­றுப்­பயணி­கள் இங்கு வந்து சென்றாலும், செந்­தோசா தீவுக்கு வருகை அளித்­த­வர்­களில் பாதிக்­கும் அதி­க­மா­னோர் இன்னும் உள்ளூர்­வா­சி­களே ஆவர்.

உள்­ளூர்­வா­சி­க­ளை­யும் சுற்­றுப்­ப­ய­ணி­க­ளை­யும் செந்­தோ­சா­வுக்கு தொடர்ந்து ஈர்க்க, வரும் ஆண்டு­களில் மேலும் பல வச­தி­க­ளைத் தொடங்க செந்­தோசா மேம்­பாட்டுக் கழ­கம் திட்­ட­மிட்டு வரு­கிறது.

உல­க­ள­வில் போட்­டித்­தன்­மை­யு­டன் விளங்க புத்­தாக்­கத்­து­டன் இருந்­து­வ­ரும் அதே­வே­ளை­யில் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் கவ­னத்­தை­யும் தொடர்ந்து பெற்­றி­ருக்க செந்தோசா விரும்­பு­கிறது.

"செந்­தோசா தீவுக்கு சிங்­கப்­பூ­ரர்­கள் தொடர்ந்து வந்­து­செல்ல நாங்­கள் விரும்­பு­கி­றோம். அதுவே எங்­க­ளுக்­கான சவால்," என்று செந்­தோசா மேம்­பாட்­டுக் கழ­கத்­தின் தலைமை நிர்­வாகி தியென் குவீ எங் சொன்­னார்.