மலாக்கா: நீர்முகப்புப் பகுதி

மலாக்கா: நீர்முகப்புப் பகுதி

1 mins read
1f899a71-1c54-4370-af41-3a83986996bf
படம்: MumbU - V -

ஏறக்குறைய 1,000 ஆண்டுகளுக்கு முன்னர், மலாக்கா ஓர் அமை­தி­யான மீன்­பி­டிக் கிரா­ம­மாக இருந்­தது. ஆனால் ஒரே நூற்­றாண்­டிற்­குள் மலாய் கலா­சா­ரம், சமை­யற்­கலை, கட்­ட­டக்­கலை ஆகிய பல்­வேறு அம்­சங்­களும் பின்­னிப் பிணைந்த மைய­மாக அது உரு­வெ­டுத்­துள்­ளது.

1500களில் இந்­ந­கர் தென்­கிழக்­கா­சி­யா­வின் முக்­கிய வர்த்­தக நடு­வ­மாக விளங்­கி­ய­தற்­கும் மலாக்கா நதி­யும் அதன் துறை­முகமுமே முதன்மை கார­ணங்­களாகும். இந்­தக் கட­லோ­ர நகரை ரசிக்க நீங்­கள் வர­லாற்று ஆய்­வா­ள­ராக இருக்க வேண்­டும் என்று அவ­சி­ய­மில்லை.

சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து நான்கு மணி நேர கார் பய­ணம் மேற்­கொண்­டால் மலாக்­கா­வைச் சென்­ற­டை­ய­லாம்.

யுனெஸ்கோ உலக மர­பு­டைமை அங்­கீ­கா­ரம் பெற்ற மலாக்­கா­வைக் காண ஒரு நாள் தேவை.

இப்­ப­கு­தி­யில் வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க பள்­ளி­வா­சல்­கள், இந்­துக் கோயில்­கள், தாவோ­யிச புனி­தத் தலங்­கள், பௌத்த பிரார்த்­த­னைக் கூடங்­கள் ஆகி­யவை உள்­ளன.