சுற்றுப்பயணிகள் அதிகம் சென்றுவரும் நகர்களில் தாய்லாந்தின் தலைநகர் பேங்காக்கும் ஒன்று. எனினும், அங்கு உள்ள வெப்பமண்டல தீவான கோ கிரெட் பற்றி பலரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுவும், இந்தச் சிறிய தீவு பேங்காக் நகரினுள் அமைந்திருக்கிறது.
2.6 கி.மீ. அகலமும் 1.5 கி.மீ. நீளமும் நிலப்பரப்பு உடைய இத்தீவு, பேங்காக்கின் மையப் பகுதியிலிருந்து ஏறக்குறைய 20 கி.மீ. தூரத்தில் உள்ளது.
பேங்காக்கின் பிரதான நதியான சாவ் பிரயாவின் நடுவில் கோ கிரெட் தீவு அமைந்து உள்ளது.
அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் விவசாயம், சுற்றுப்பயணம், சிறு தொழில்கள் மூலம் வருவாய் ஈட்டுகின்றனர். ஏறக்குறைய $30 கட்டணத்துக்கு கோ கிரெட் தீவைப் படகில் சுற்றிப் பார்க்கலாம். இத்தீவில் சுற்றுலாத் தலங்கள் என்று குறிப்பிட்டுச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், அமைதியைப் பெறுவதற்காகவே இங்கு செல்லலாம்.

