சிதாங்: சீன ஓவியத்தைப்போல

சிதாங்: சீன ஓவியத்தைப்போல

1 mins read
d3df67a4-1c3a-49b6-84cf-bd4d0f46adb5
படம்: ரானன் ஓ கோனெல் -

சீனா, சுற்­றுப்­ப­ய­ணி­க­ளுக்கு தன் கத­வு­களை இன்­னும் திறந்­து­விடா­மல் இருக்­க­லாம். ஆனால் அது அவ்­வாறு செய்­யும்­போது, சீனா­வில் சென்­று­பார்க்க வேண்டிய இடங்­களில் சிதாங்­கும் ஒன்று.

நிதி மைய­மான ஷாங்­கா­யில் இருந்து 90 நிமிட கார் பய­ணம் மேற்­கொண்­டால், நீர்­நிலை சூழ்ந்த இந்­தக் கிரா­மப்­பு­றத்­தைச் சென்­ற­டை­ய­லாம். ஆனால், ஷாங்­காய்க்­கும் சிதாங்­கிற்­கும் இடையே பல நூற்­றாண்டு­கள் இடை­வெளி இருப்­பது­போல உணர முடி­யும்.

ஷாங்­காய்க்கு அருகே பிர­ப­ல­மான எட்டு நீர்­நிலை கிரா­மங்­கள் உள்­ளன. அவற்­றில் நன்கு பாது­காக்­கப்­பட்ட, கண்­க­வர் இட­மாக சிதாங் உள்­ளது. பழங்­கால சீனத் திரைப்­ப­டக் காட்­சி­க­ளின் பின்­ன­ணி­யைப்­போல அது தோற்­ற­ம­ளிக்­கிறது.