நேப்பாளத்தின் தலைநகர் காட்மாண்டுவிற்கு கிழக்கே 90 நிமிடங்களுக்கு டாக்சி பயணம் மேற்கொண்டால் பனாவ்தி நதியைச் சென்றடையலாம்.
1,800 ஆண்டு பழமைவாய்ந்த பனாவ்தி நகர், மூன்று நீர்நிலைகளின் சந்திப்பில் அமைந்துள்ளது. இங்கு பாரம்பரிய வீடுகளும் இந்து, பௌத்த ஆலயங்களும் உள்ளன.
நேப்பாளத்தில் காட்மாண்டு பள்ளத்தாக்கிற்கு அடுத்ததாக கலைநயமிக்க சிறுநகராக இது கருதப்படுகிறது.
அமைதியாகக் காட்சி அளிக்கும் இந்நகரில் சில ஆயிரம் பேர் மட்டுமே வசிக்கின்றனர். அவர்களில் பலரும் பாரம்பரிய நேப்பாள ஆடைகளை அணிந்திருக்கின்றனர்.
இந்நகரின் கலாசாரத்தைப் பாதுகாக்க நேப்பாள அரசாங்கம், பனாவ்தி நகர் யுனெஸ்கோ உலக மரபுடைமைத் தகுதியைப் பெற விண்ணப்பித்துள்ளது.

