ஜப்பானின் பிரபல நகர்களான ஒசாகாவுக்கும் ஹிரோஷிமாவுக்கும் இடையே அதிவேக ரயில்களில் சுற்றுப்பயணிகள் செல்லும்போது ஒகாயமா பகுதியைக் கடந்துசெல்வர். எனினும், இங்கு செல்வோருக்கு வெகுமதி காத்திருக்கிறது.
அதன் அருகேயுள்ள குராஷிகி நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க பிக்கான் எனும் பகுதி, புகைப்படங்கள் எடுப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்குமாம்.
1600களில் இருந்தே இப்பகுதி அவ்வளவு பெரிய மாற்றம் காணவில்லை.
அந்தக் காலத்தில் உள்ள சேமிப்புக் கிடங்குகள் பாதுகாக்கப்பட்டு அரும்பொருளகங்களாகவும் கலைக்கூடங்களாகவும் இயங்குகின்றன.

