மின்னிலக்கச் சாதனங்களின் பயன்பாட்டால் ஏற்படும் முதுகுவலி

மின்னிலக்கச் சாதனங்களின் பயன்பாட்டால் ஏற்படும் முதுகுவலி

1 mins read
2ed7ced2-a3f8-4e12-8bdf-02e88770c2b6
-

சாதா­ர­ண­மாக சம­நிலை­யில் ஒரு மனி­தத் தலை­யின் எடை 4.5 கிலோ கிராம் ஆகும். தலையை முன்­னால் சாய்க்­கும்­போது ஒவ்­வோர் அங்கு­லத்­திற்­கும் முது­கெ­லும்­பின் அழுத்­தம் கூடு­கிறது.

கைப்­பே­சியை மடி­யில் வைத்துப் பார்க்­கும்­போது உங்­கள் கழுத்து, 10 முதல் 14 கிலோ வரை­யில் எடை­யைத் தாங்­கு­கிறது.

இத்­த­கைய அதி­கப்­ப­டி­யான அழுத்­தம், உங்­கள் முது­கெ­லும்­பிற்கு அழுத்­தத்தை ஏற்­ப­டுத்தி, அதன் சீர­மைப்­பைக் குலைக்­கிறது.

கைப்­பே­சி­களை அள­வுக்­க­தி­க­மாகப் பயன்­ப­டுத்­து­வ­தால் ஏற்­படக்­கூ­டிய அசா­த­ர­ண­மான அழுத்­தம் மற்­றும் முது­கெ­லும்­புப் பிரச்­சி­னை­களில் இருந்து காக்க வலு­வான நெகிழ்­வான முது­கும் கழுத்­தும் தேவை.

யோகப் பயிற்­சி­களைச் செய்­வ­தால் முது­கை­யும் கழுத்துத் தசைப்­பகுதி­க­ளை­யும் தளர்த்தி, வலு­வாக்கும்.

மின்­னி­லக்­கச் சாத­னங்­களை மடி­யில் வைத்து பயன்­ப­டுத்­து­வ­தற்­குப் பதில், சற்றே உய­ரத்­தில் கண்­ணுக்கு நேர்­கோட்­டில் அமை­யு­மாறு அதன் இடத்தை மாற்­றுங்­கள்.

இச்­சா­த­னங்­களை நாள் முழு­வதும் பயன்­ப­டுத்­தினால், அவ்வப்­போது இடை­வேளை எடுத்­துக்­கொள்ள வேண்­டும்.