55 நாடுகளுக்கு பயணித்த சிங்கப்பூரர்

கிரு­மிப் பர­வ­லால் 2020ஆம், 2021ஆம் ஆண்­டு­களில் பய­ணங்­கள் முடங்கி இருந்த கால­கட்­டத்­தில், சிங்­கப்­பூ­ரர் ஒரு­வர் ஐந்து கண்­டங்­க­ளைச் சேர்ந்த 55 நாடு­க­ளுக்­குப் பய­ணம் செய்­தார். அது­வும் ஒரு­மு­றை­கூட கொவிட்-19 கிருமி தொற்­றா­மல் இதைச் சாதித்­தார்.

விசா அனு­ம­திக்கு விண்­ணப்­பித்­தல், கொவிட்-19 தொடர்­பான ஆவ­ணங்­க­ளைச் சமர்ப்­பித்­தல், பிசி­ஆர் பரி­சோ­த­னை­க­ளைச் செய்­தல் என 27 வயது ஜேஷுவா சோ, அந்த ஈராண்­டு­களில் கடந்த தடங்­கல்­கள் ஏரா­ளம்.

திரு சோ, நான்கு நிறு­வ­னங்­க­ளைத் தொடங்­கி­யுள்­ளார். தற்­போது புதிய நிறு­வ­னங்­களில் முத­லீடு செய்­யும் நிறு­வ­னத்­தில் பணி­பு­ரி­கி­றார்.

2020ஆம் ஆண்டு பிப்­ர­வ­ரி­யில் நாடு­கள் தங்­கள் எல்­லை­களை மூடத் தொடங்­கிய நேரத்­தில் திரு சோ, ஒரு மாநாட்­டில் கலந்­து­கொள்ள இஸ்­ரேல் சென்­றார். மாநாட்­டுக்கு வர­வேண்­டிய பாதிப் பேர் வர­வில்லை.

தாம் ஏற்­கெ­னவே திட்­ட­மிட்­ட­படி அங்­கி­ருந்து சுவீ­ட­னுக்­கும் நார்­வே­யுக்­கும் சென்­றார் திரு சோ.

அதே பிப்­ர­வ­ரி­யில் தமது நிறு­வ­னப் பணி­க­ளுக்­காக மியன்­மா­ருக்­குச் சென்­றார் திரு சோ. விமா­னப் பய­ணங்­கள் குறைந்­த­தால் இரண்டு வாரப் பய­ணம் நான்கு மாதங்­க­ளாக நீண்­டது. மியன்­மா­ரில் கொவிட்-19 கார­ண­மாக திரு சோ மூன்று வாரங்­க­ளுக்­குத் தனி­மைப் படுத்­தப்­பட்­டார்.

2020ஆம் ஆண்டு மீண்­டும் நவம்­ப­ரில் பணி நிமித்­த­மாக தென் ஆப்­பி­ரிக்கா புறப்­பட்ட திரு சோ, அங்­கி­ருந்து ஸிம்­பாப்வே, தான்சானியா உள்­ளிட்ட ஆப்­பி­ரிக்க நாடு­க­ளுக்­கும் எகிப்­துக்­கும் சுற்­றுப்­ப­ய­ணம் செய்­தார். குற்­ற­வா­ளி­களோ கிரு­மியோ தம்மை அண்­ட­வில்லை என்­றார் அவர்.

இவற்­றைத் தவிர, ஸ்பெ­யின், செர்­பியா, எஸ்­டோ­னியா, பாகிஸ்­தான், பங்­ளா­தேஷ், மத்­திய அமெ­ரிக்க நாடு­கள் உள்­ளிட்ட பல்­வேறு நாடு­க­ளுக்கு இரண்டு ஆண்­டு­களில் சென்­று­விட்­டார்.

தமது தற்­போ­தைய வேலை­யில், தாம் பய­ணிக்­கும் இடங்­க­ளி­லி­ருந்து வேலை செய்ய முடி­வ­தால் தொடர் பய­ணங்­கள் சாத்­தி­ய­மா­வ­தாக திரு சோ கூறி­னார்.

கூட்ட நெரி­சல் இல்­லாத, பண்­பாட்டுச் செறி­வுள்ள, பாது­காப்­பான, விலைக் கட்­டுப்­ப­டி­யான நாடு­களே பய­ணம் செய்­வ­தற்­குச் சிறந்த நாடு­கள் என்ற திரு சோ, எஸ்­டோ­னி­யா­தான் தமக்­குப் பிடித்த அத்­த­கைய நாடு என்று குறிப்­பிட்­டார்.

விவே­கத்­து­டன் செயல்­பட்­டால், எவ­ரும் குறைந்த செல­வில் ஊர் ஊராக பய­ணம் செய்­ய­லாம் என்­றார் திரு சோ.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!