உலக ஞாபகமறதி (அல்ஷைமர்) தினத்தை ஒட்டி, சிங்கப்பூரின் புகழ்பெற்ற ஐந்து கட்டடங்கள் ஊதா, மஞ்சள் ஆகிய நிறங்களில் ஒளியூட்டப்பட்டன.
எஸ்பிளனேட் அரங்கம், சிங்கப்பூர் ராட்டினம், மரினா பே சேண்ட்ஸ், தேசிய விளையாட்டரங்கம்,, சிங்கப்பூர் தேசிய காட்சிக்கூடம் ஆகியவை அவை.
பொதுமக்களிடையே, 'டிமென்ஷியா' எனப்படும் நினைவாற்றல் இழப்பு, வழக்கமாக அதனால் ஏற்படக்கூடிய ஞாபகமறதி நோய் ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த ஒளியூட்டுக்கான நோக்கம். சமூக சேவை அமைப்பான 'டிமென்ஷியா சிங்கப்பூர்' இதற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதனால் பாதிக்கப்பட்டோர், அவர்களின் பராமரிப்பாளர்கள், குடும்பத்தினர், சுகாதாரத்துறையினர், சமூக சேவையாளர்கள் ஆகியோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வாய்ப்பாக இதனை ஏற்பாடு செய்ததாக அமைப்பு கூறியது.

