சிங்கப்பூர் சந்திக்கும் சவால்கள் குறித்து இளையர் கருத்து

பொன்­மணி உத­ய­கு­மார்

உள்­நாட்டு, வெளி­யு­றவு சவால்­கள் குறித்து அண்­மை­யில் நன்­யாங் தொழில்­நுட்ப பல்­க­லைக்­க­ழ­கத்­தில் நடந்த கருத்­த­ரங்கு ஒன்­றில் சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம் பேசி­னார். சிங்­கப்­பூ­ரின் வருங்­கால வளர்ச்சி, தேசிய பாது­காப்பு, சிங்­கப்­பூர் எதிர்­கொள்­ளக்­கூ­டிய சவால்­கள் பற்றி இளை­யர்­க­ளுக்­குப் புரி­யும் வகை­யில் விளக்­கினார் அமைச்­சர்.

சிங்­கப்­பூ­ரின் பிறப்பு விகி­தம் குறைந்­தி­ருப்­ப­தைச் சுட்­டிக்­காட்­டிய அவர், இத­னால் வருங்­காலத்­தில் மூப்­ப­டை­யும் சமூ­கத்­தி­னர் எண்­ணிக்கை கூடு­வ­தன் சவால்­க­ளைப் பற்­றிப் பேசி­னார்.

குடும்ப வாழ்க்கை...

சிங்­கப்­பூ­ரின் விலை­வா­சி­யை­யும் போட்­டித்­தன்­மை­மிக்க வேலை­களை­யும் கருத்­தில் கொள்­ளும்­போது வருங்­கா­லத்­தில் தனக்­கென ஒரு குடும்­பம் வேண்­டாத நிலை­யும் ஏற்­ப­ட­லாம் என்று இயந்­தி­ரப் பொறி­யி­யல் துறை­யில் பயி­லும் விஷால் பவன், 23 கூறி­னார். தமது வாழ்க்­கைத்­தொ­ழில், மன­ந­லன், சமூக நலன் போன்­ற­வற்­றுக்கு முன்­னு­ரிமை கொடுக்க விரும்­பும் இவர், திரு­ம­ணம், குடும்­பம் போன்­ற­வற்­றுக்­குச் சரி­ச­ம­மாக நேரத்தை ஒதுக்க இய­லாது என்­கி­றார்.

தன் போன்ற இளை­யர்­கள் எதிர்­கா­லத்­தில் குழந்தை பெறு­வ­தற்கு முன்­னு­ரிமை வழங்க விரும்­பா­த­தற்கு இவையே கார­ணம் எனக் கரு­து­கி­றார். அதி­கரிக்­கும் விலை­வா­சி­யை­யும் கருத வேண்­டும் என்­றார்.

போதைப்­பொ­ரு­ளும்

மரண தண்­ட­னை­யும்...

மரண தண்­டனை பற்றி கேள்வி எழுப்­பப்­பட்­ட­போது சிங்­கப்­பூர் ஏன் அச்­சட்­டத்தை இன்­றும் அமல்­ப­டுத்தி வரு­கிறது என்று புள்­ளி­வி­வ­ரங்­க­ளு­டன் அமைச்­சர் சண்­மு­கம் விளக்­கி­னார்.

சட்­டம் மாற்­றப்­பட்­டால் அது போதைப்­பொ­ருள் புழக்­கம் அதி­கரிக்க ஒரு கார­ண­மாக அமைந்­து­வி­டும் என்­றார். மக்­கள் நலன் கரு­தியே இந்­தச் சட்­டத்­தில் மாற்­றம் ஏதும் கொண்டு வரப்­ப­ட­வில்லை என்­றார் அமைச்­சர்.

சிங்­கப்­பூ­ரில் போதைப்­பொருள் பிரச்­சினை அதி­கம் இல்லை என்று கரு­தும் சீலன் தின­க­ரன், 24, மரண தண்­டனை குறித்து அர­சாங்­கம் எடுத்­து­வரும் நட­வ­டிக்­கை­க­ளைத் தான் ஆத­ரிப்­ப­தா­கக் கூறி­னார். மற்ற நாடு­களில் சில போதைப்­பொ­ருள்­க­ளின் புழக்­கம் குற்­ற­மா­கக் கரு­தப்­ப­டா­த­தால் நமது நாட்­டின் பாது­காப்பை உறு­தி­செய்­வ­தற்­குத் தற்­போ­தைய சட்­டங்­களில் மாற்­றம் கூடாது என்­றார் அவர்.

பாது­காப்­பு­மிக்க சூழல்...

சிங்­கப்­பூ­ரில் குற்ற எண்­ணிக்கை குறை­வாக இருப்­ப­து­டன் பாது­காப்­பும் உள்­ளதை எண்­ணித் தான் மன­நி­றைவு கொள்­வ­தாக இயந்­தி­ரப் பொறி­யி­யல் துறை­யில் பயி­லும் சின்­ன­துரை தங்கவேலு, 22, கூறு­கி­றார். இரவு நேரங்­க­ளில்­கூட மக்­கள் தனி­யாக நடந்து செல்­லப் பயப்­படு­வ­தில்லை என்­றும் மற்ற மேற்­கத்­திய நாடு­க­ளில்­கூட இது­போன்ற பாது­காப்பு சுதந்­தி­ரம் கிடைப்­ப­தில்லை என்­ப­தை­யும் அமைச்­ச­ரின் உரை வலி­யு­றுத்­தி­ய­தாக இவர் சொன்­னார்.

வெளி­நாட்­டுத் திற­னா­ளர்கள்...

வெளி­நாட்­டுத் திறன்­களை ஈர்க்க சிங்­கப்­பூர் ஏன் தொடர்ந்து முயற்­சிக்க வேண்­டும் என்று விளக்­கிய அமைச்­சர், வெளி­நாட்­டுத் திறன்­களை மேல்­நிலை நிர்­வாக வேலை­களில் அமர்த்­தி­னால்­தான் நடு­நிலை நிர்­வாக வேலை­க­ளுக்கு சிங்­கப்­பூ­ரர்­களின் தேவை அதி­க­ரிக்­கும் என்­றார். விரை­வில் பட்­டம் பெற­வி­ருக்­கும் பல்­க­லைக்­க­ழக மாணவி சஞ்­ஜனா சுரேஷ், 22, கொவிட்-19 கொள்­ளை­நோ­யால் வேலை­வாய்ப்­பு­கள் குறைந்­துள்ள நிலை­யில் சிக்­கல்­க­ளை­யும் எதிர்­கொள்ள வேண்­டி­யுள்­ளது கவலை அளிக்­கிறது என்­றார்.

மின்னியல் மின்­ன­ணுப் பொறி­யி­யல் துறை­யில் பயி­லும் இவர், தொழில்­நுட்­பம் சார்ந்த வேலை­க­ளுக்கு அதி­க­மான பொறி­யி­யல் துறை பட்­ட­தா­ரி­கள் முன்­வ­ரு­வர் என்­ப­தால் போட்டி மிகக் கடு­மை­யா­கவே இருக்­கும் என்­றார். பட்­டம் பெறு­ம்­முன் தன்னை மேலும் எவ்­வ­ழி­களில் மேம்­ப­டுத்­திக்­கொள்ள முடி­யும் என்­ப­தில் கவ­னம் செலுத்தி வரு­வ­தா­கக் கூறி­னார் சஞ்­ஜனா.

பட்­ட­தா­ரி­க­ளுக்­குச் சவால்...

அமைச்­சர் கூறிய கருத்­து­களைப் பற்றி கருத்­து­ரைத்த பொரு­ளி­யல் துறை பட்­ட­தாரி திவ்­யா­தா­ரணி லக்ஷ்ம­ணன், 23, வெளி­நாட்­டுத் திற­னா­ளர்­களுக்கு சிங்­கப்­பூ­ரில் வேலை அளிக்­கப்­ப­டு­வ­தால் தன்­னைப் போல் வேலை தேடிக்­கொண்­டி­ருக்­கும் பட்­ட­தா­ரி­கள் சிர­மங்­களை எதிர்­நோக்­கு­கி­றார்­கள் என்று கரு­து­கி­றார்.

வெளி­நாட்­டுத் திற­னா­ளர்­களுக்கு வேலை அளிப்­ப­தன் நோக்­கத்­தைத் தன்­னால் புரிந்து­கொள்ள முடிந்­தா­லும் அனைத்து நிலை வேலை­யி­லும் அவர்­கள் அமர்த்­தப்­ப­டு­வ­தால் உள்­ளூர்­வா­சி­க­ளுக்­கான வேலை­வாய்ப்பு­கள் குறைந்­துள்­ளன என்­பது இவர் கருத்து.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!