அழகிப் போட்டியில் இளம் தாயார் லாவண்யா

3 mins read
04c00574-28b5-43c9-a033-5b6677be851f
கணவர் குரு, குழந்தை லீரியோ பிளசிங்குடன் லாவண்யா. -

திவ்­யா­தாக்­‌ஷாய்னி

அழகு ராணிப் போட்­டி­களில் கலந்­து­கொள்­வது லாவண்­யா­வின் பல­நாள் கனவு. ஆனால், தனது விமா­னப் பணிப்பெண் வேலை­யால் அது­போன்ற போட்டி­களில் அவ­ரால் பங்­கேற்க முடி­ய­வில்லை.

சமு­தா­யத்­தில் நிக­ழும் பிரச்­சி­னை­க­ளுக்­குக் குரல் கொடுக்­க­வும் மற்­ற­வர்­க­ளுக்கு உத­வ­வும் விரும்­பிய லாவண்யா பிரியா, 32, ஒரு சம­யம் இன்ஸ்­ட­கி­ராம் தளத்­தில் 'மிஸஸ் சிங்­கப்­பூர் வோர்ல்டு 2022' அழகு ராணிப் போட்­டிக்­கான விளம்­ப­ரப் பதி­வைத் தற்­செ­ய­லா­கப் பார்த்­தார்.

அது­வரை சிறு சிறு பிரச்­சினை­க­ளுக்­குச் சமூக ஊட­கத்­தின் வழி­யாக குரல் கொடுத்து வந்த லாவண்யா, மேலும் பலரை எட்ட வேண்­டும் என்­ப­தற்­காக இப்­போட்­டி­யில் கலந்­து­கொள்ள முடி­வெ­டுத்­தார். இப்­போட்­டி­யில் இறு­திச் சுற்­றுக்­குத் தகு­தி­பெற்ற ஒரே இந்­தி­யர் என்ற பெரு­மை­யும் லாவண்­யா­வைச் சேரும்.

கடந்த ஜூன் மாதத்­தில் போட்­டிக்­கான சுற்­று­கள் தொடங்­கி­ய­தா­கக் கூறிய இவர், திறன் சுற்­றி­லும் சமை­யல் சுற்­றி­லும் முத­லி­டத்­தைப் பிடித்­தார். ஆனால், சமை­யல் அறையை எட்­டிக்­கூட பார்க்­கா­த­வர் லாவண்யா.

போட்­டிக்­குத் தயார்­செய்­வ­தற்­கா­கவே தன் அண்­ண­னி­ட­மி­ருந்து சமை­யல் கற்­றுக்­கொண்­டார் அவர். வெங்­கா­யம் நறுக்­கு­வ­தில் தொடங்கி வெவ்­வேறு சமை­யல் முறை­க­ளைக் கையாள்­வது வரை அனைத்­தை­யும் ஒரே வாரத்­தில் அறிந்­தார்.

போட்­டிக்­காக புகைப்­ப­டம் பிடிப்­ப­தற்கு அழ­கி­கள் லங்­காவி தீவுக்­குச் செல்­ல­வேண்­டி­யி­ருந்­தது. இந்­தப் பய­ணத்­தில் தன் மக­னும் பங்கேற்க வேண்­டும் என்று விரும்­பிய லாவண்யா, தன் 8 மாதக் குழந்­தையை அழைத்­துச் செல்ல முடி­வெ­டுத்­தார்.

ஏற்­பாட்­டா­ளர்­கள் கொடுக்­கும் நேரத்­திற்­குள் தன்­னைத் தயார்­படுத்­திக்­கொள்­ள­வும் குழந்­தை­யைப் பார்த்­துக்­கொள்­ள­வும் தனக்­குச் சிர­ம­மாக இருந்­த­போ­தும் போட்­டி­யில் கலந்­து­கொண்ட மற்ற தாய்­மார்­கள் கைகொ­டுத்­த­தா­கக் கூறி­னார் லாவண்யா.

போட்டி தொடக்­கத்­தி­லி­ருந்து இறுதிவரை பல இன்­னல்­க­ளைச் சந்­தித்­தா­லும், சற்­றும் மனம் தள­ரா­மல் லாவண்யா முழு மூச்­சு­டன் சக போட்­டி­யா­ளர்­க­ளுக்­குக் கடும் போட்டி கொடுத்து மூன்­றாம் நிலை­யில் வந்­தார்.

ஒற்­றைப் பெற்­றோர் குடும்­பத்­தைச் சேர்ந்த லாவண்யா, தன் தாயா­ரி­ட­மி­ருந்து மன­வ­லி­மை­யின் முக்­கி­யத்­து­வத்­தைக் கற்­றுக்­கொண்­ட­தாக் கூறி­னார். பிறர் உத­வி­யின்­றிச் சவால்­களை எதிர்­கொண்ட தன் தாயா­ரைப் போலவே தானும் துணிச்­ச­லு­டன் நடை­போட வேண்­டும் என்று லட்­சி­யம் கொண்­ட­வர் லாவண்யா.

"ஒரு பெண்­ணுக்கு அவ­ரின் குடும்­பத்­தா­ரு­டைய ஆத­ரவு இருக்­க­லாம். ஆனால் கண­வ­ரின் ஆத­ரவு இருக்­கும்­போது இந்த உல­கையே ஆள­லாம் என்ற நம்­பிக்கை அந்­தப் பெண்­ணுக்­குப் பிறக்­கும்," என்று கூறு­கி­றார் லாவண்யா. போட்டி­யில் பங்­கேற்ற பய­ணம் முழுக்க தன் கண­வர் பெரும் ஆத­ரவு அளித்­த­தா­க­வும் கூறி­னார்.

குடும்­பம், கண­வர், நெருங்­கிய நண்­பர்­கள் மட்­டு­மின்றி சமூக ஊட­க­வழி நண்­பர்­ ஆன­வர்­களும் தனக்கு ஆத­ர­வாய் இருந்­த­னர் என்று லாவண்யா குறிப்­பிட்­டார். குழந்தை வந்­த­பின் மற்­ற எதற்கும் நேரம் இருக்­காது எனத் தான் கர்ப்­பி­ணி­யாக இருந்த சம­யத்­தில் நண்­பர்­கள் கூறி­யி­ருந்­ததை நினை­வு­கூர்ந்த லாவண்யா, அதையே தான் ஒரு சவா­லாக எடுத்­துக்­கொண்­ட­தா­கக் கூறி­னார்.

"என்ன நடக்­கும் என்­பதை நம் மனம்­தான் முடி­வு­செய்­யும். ஒரு தாயாக இருந்­தா­லும் பெண்­கள் தங்­கள் வாழ்க்­கையை விருப்­பம்­போல் வாழ­லாம். அதில் குழந்தை இடம்­பெ­று­வ­தாக அமைத்­துக்­கொள்­ள­லாம். இது எளி­தல்ல, ஆனால் முடி­யாத காரி­ய­மும் அல்ல. குழந்­தை­யு­டன் இருக்­கும் ஒவ்­வொரு தரு­ணத்­தை­யும் கொண்­டா­டுங்­கள்," என்­றார் அவர்.

அழ­கும் அறி­வும் மட்­டு­மில்­லாமல் மற்­ற­வர்­க­ளுக்கு உதவ வேண்­டும் என்ற குறிக்­கோள் கொண்ட இவர், பாலித் தீவுக்­கும் இந்­தி­யா­வுக்­கும் செல்­வ­துண்டு. அங்­குள்ள வசதி வாய்ப்­பில்­லாத பிள்­ளை­க­ளு­டன் நேரம் செல­வி­டு­வது, அவர்­க­ளுக்கு உண­வ­ளிப்­பது போன்ற பணி­களில் ஈடு­படு­கி­றார்.

"அவர்­க­ளின் சிரிப்­பில் கிடைக்­கும் இன்­பம் வேறெ­தி­லும் கிடைப்­ப­தில்லை," என்று கூறி­னார் லாவண்யா. உயர்ந்த லட்­சி­யங்­கள் கொண்­டுள்ள இவர், அழகு ராணிப் போட்­டிக்­காக பெண்களைத் தயார்­ப­டுத்­தும் பள்ளி ஒன்றை சிங்­கப்­பூ­ரில் திறக்க விரும்பு­கி­றார்.