'பிளேட்லட்' அளவை அதிகமாக்கும் வழிகள்

'பிளேட்லட்' அளவை அதிகமாக்கும் வழிகள்

2 mins read

டெங்­கி­யால் பாதிக்­கப்­ப­டும்­போது ஒரு­வ­ரின் உட­லி­லுள்ள 'பிளேட்­லட்­டு­கள்' (platelets) குறை­யும். டெங்­கி­யைத் தவிர, பல சுகா­தா­ரப் பிரச்­சி­னை­க­ளின்­போ­தும் அவை குறை­யக்­கூ­டும் என்று மருத்­துவ நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

பிளேட்­லட்­டு­கள் என்­றால் என்ன என்­பதை அறிந்­தி­டு­வோம். எலும்பு மஜ்­ஜை­யில் விர­விக் கிடக்­கும் மிகச் சிறிய ரத்த அணுக்­களே இவை. காயம் ஏற்­ப­டும்­போது ரத்­தத்தை இவை உறைய வைக்­கும்.

அத­னால்­தான், கையில் வெட்­டுக் காயம் இருந்­தால் அதி­லி­ருந்து ரத்­தம் வழி­வதை அடுத்து ஓரிரு நிமி­டங்­களில் ரத்­தக்­க­சிவு தானாக நின்­று­போ­கும். இதற்கு பிளேட்­லட்­டு­களே கார­ணம். அதி­கப்­ப­டி­யான ரத்­தம் உட­லி­லி­ருந்து வெளி­யேறி நாம் உயி­ரி­ழப்­பதை அவை தடுக்­கின்­றன.

ஆரோக்­கி­ய­மான ஒரு நப­ரின் உட­லில் 100,000க்கும் மேற்­பட்ட பிளேட்­லட்­டு­கள் இருக்­க­வேண்­டும். இருப்­பி­னும் டெங்கி, புற்­று­நோய், ரத்த சோகை போன்­ற­வற்­றால் பாதிக்­கப்­படும் ஒரு­வ­ரின் உட­லில் இந்த அளவு குறை­ய­லாம்.

20,000க்கும் குறை­வாக பிளேட்­லட் அளவு இருந்­தால் அது மிக ஆபத்­தான நிலை­யா­கும்.

இந்­நி­லை­யில், இயற்­கை­யான வழி­களில் உட­லின் பிளேட்­லட் அளவை அதி­க­மாக்­கும் வழி­களை நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

 விலங்­கு­வழி கிடைக்­கும் புர­தம்

தேவை­யான பிளேட்­லட் அள­வைப் பெறு­வ­தற்கு உட­லில் வைட்­ட­மின் 'B12' தேவை. முட்டை, ஈரல், கட­லு­ணவு போன்­ற­வற்­றில் இந்த வைட்­ட­மின் அதி­க­முள்­ளது. ரத்த அணுக்­களை ஆரோக்­கி­ய­மாக வைத்­தி­ருக்க, 'B12' வைட்­ட­மின் முக்­கி­யப் பங்­காற்­று­கிறது.

 இள­நீர்

டெங்கி நோயா­ளி­கள் இள­நீர் குடிக்­கு­மாறு மருத்­து­வர்­கள் பரிந்­துரைக்க நீங்­கள் கேட்­டி­ருக்­க­லாம். இதற்கு அறி­வி­யல் ரீதி­யான கார­ண­மும் உண்டு.

இள­நீரை அடிக்­கடி குடிப்­ப­தால் நம் சிவப்பு ரத்த அணுக்­கள் மற்­றும் 'ஹேமோ­கு­ளோ­பின்' பல­ன­டை­யும் என்று 2019ஆம் ஆண்­டில் வெளி­வந்த தேசிய மருத்­துவ நூல­கத்­தின் ஆய்வு கூறு­கிறது. பிளேட்­லட்­டு­கள் கணி­ச­மான அளவு அதி­கரித்­த­தா­க­வும் ஆய்வு கூறிற்று.

 பப்­பாளி இலைச் சாறு

பிளேட்­லட்­டு­களை அதி­க­ரிக்­கச் செய்­யும் பாட்டி வைத்­தி­யம் என இத­னைக் குறிப்­பி­டு­வர். டெங்­கி­யால் பாதிக்­கப்­பட்ட சுமார் 400 பேரில் பப்­பாளி இலைச் சாறு­டைய மருந்­தும் வழக்­க­மான டெங்கி சிகிச்­சை­யும் பாதி பேருக்கு வழங்­கப்­பட்­டன.

எஞ்­சிய 200 பேரைக் காட்­டி­லும் பப்­பாளி மருந்து உட்­கொண்­டோருக்கு பாதிப்பு குறை­வாக இருந்­த­து­டன் ரத்த மாற்­ற­மும் தேவைப்­ப­ட­வில்லை என்று ஆய்­வின்­வழி கண்­ட­றி­யப்­பட்­டது.

 'கிலோய்' கொடி­யும்

பெர்ரி பழங்­களும்

சீந்தில் என்ற மரங்களில் படரும் ஒருவித மூலிகையை 'கிலோய்' என்றழைப்பர். இதன் இதய வடி­விலான இலை­க­ளி­லி­ருந்து பெறப்­படும் சாறு, ரத்­தத்­தைச் சுத்­தப்­படுத்­து­வ­து­டன் வெள்ளை ரத்த அணுக்­கள், சிவப்பு ரத்த அணுக்­கள், ஹேமோ­கு­ளோ­பின் ஆகி­ய­வற்­றுக்­குப் பய­ன­ளிப்­ப­தாக 'பப்­மெட் செண்ட்­ரல்' வெளி­யிட்ட 2010ஆம் ஆண்டு ஆய்வு ஒன்று கூறு­கிறது.

மேலும், 'கிலோய்' கொடி­யின் பகு­தி­கள் அனைத்­தும் ஆயுர்­வேத மருத்­து­வத்­துக்­குப் பயன்­ப­டுத்­தப்­படு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

பெர்ரி பழங்­க­ளைச் சாப்­பிட்டு வந்­தால் பிளேட்­லட் செயல்­பாடு, ரத்த அழுத்­தம், கொழுப்­ப­ளவு ஆகி­ய­வற்­றில் சாத­க­மான மாற்­றங்­கள் ஏற்­ப­டு­வ­தாக தேசிய மருத்­துவ நூலக ஆய்வு ஒன்­றும் கூறு­கிறது.

இத­யம் தொடர்­பான நோய்­களை­யும் பெர்ரி பழங்­கள் தடுக்க உதவு­வதாக ஆய்வு கூறு­கிறது.