'நாளை, நாளை, நாளை என்று தள்ளிப் போடாதே'

'நாளை, நாளை, நாளை என்று தள்ளிப் போடாதே'

2 mins read

ஓராண்­டில் என்­னென்ன சாதிக்க முடி­யும் என்று ஒரு­வர் தன் ஆற்­றலை அள­வுக்கு அதி­க­மாக மதிப்­பி­டு­கி­றார். ஆனால் பத்­தாண்­டு­களில் தான் சாதிக்­கக்­கூ­டி­ய­தைக் குறைத்து மதிப்­பி­டு­கி­றார். இவை பில் கேட்ஸ் கூறிய சொற்­கள்.

குறு­கிய காலத்­திற்­கும் இந்­தப் பொன்­மொழி பொருந்­தும். நாம் ஒரு நாளில் என்­னென்ன செய்து முடிக்க முடி­யும் என்­பதை அள­வுக்கு அதி­க­மாக மதிப்­பிட்டு, ஓராண்­டில் சாதிக்­கக்­கூ­டி­ய­தைக் குறைத்து மதிப்­பிட்­டு­வி­டு­கி­றோம்.

இருப்­பி­னும், தின­மும் செய்ய வேண்­டிய பணி­களில் மூழ்­கிப் போகா­மல் நமது பெரிய இலக்­கு­களை நோக்கி எவ்­வாறு தொடர்ந்து முன்­னே­று­வது?

இதற்­குச் சிலர் பயன்­ப­டுத்­தும் ஓர் உற்­பத்­தித்­தி­றன் முறை­தான் 'இட் த ஃபிரோக்' (Eat The Frog).

கவலை வேண்­டாம். தவ­ளை­யைச் சாப்­பி­டு­வ­தாக இது பொருள்­ப­டாது. ஒரு குறிப்­பிட்ட நாளில் கடி­ன­மான ஒரு வேலை­யைச் செய்ய வேண்­டி­யி­ருந்­தால் அதைக் காலை­யில் முதல் வேலை­யா­கச் செய்து முடிப்­பதையே இது குறிக்­கும்.

பிறகு பார்த்­துக்­கொள்­ள­லாம் என்று ஒரு வேலை­யைத் தள்­ளிப் போடு­ப­வர்­கள், பல­வற்­றில் கால்­வைத்­தா­லும் முக்­கி­ய­மா­ன­வற்­றில் முன்­னேற்­றம் காணா­தோர், உற்­பத்­தித்­தி­றன்­மிக்க ஓர் அமைப்­பு­மு­றை­யைப் பின்­பற்­றச் சிர­மப்­ப­டு­வோர், செய்ய வேண்­டிய வேலை­க­ளைப் பார்த்­துத் திண­றிப் போவோர் ஆகி­யோ­ருக்கு இந்த உத்தி உத­வும் என்று கூறப்­ப­டு­கிறது.

'ஒரு தவ­ளை­யைச் சாப்­பிட்­டாக வேண்­டும் என்­றால் அதைக் காலை­யில் முதல் வேலை­யா­கச் செய்து முடி. இரண்டு தவ­ளை­கள் என்­றால் முத­லில் பெரி­தான தவ­ளையை விழுங்கு," என்ற புகழ்­பெற்ற எழுத்­தா­ள­ரான மார்க் டுவெய்ன்­னின் அறி­வு­ரை­யின் அடிப்­ப­டை­யில் உற்­பத்­தித்­தி­றன் ஆலோ­ச­கர் பிரேய்ன் டிரேசி இந்த உத்­தியை உரு­வாக்கி உள்­ளார்.

அத­னால் மிகக் கடி­ன­மான பணியை முத­லில் அடை­யா­ளம் காணுங்­கள். அதை உடனே செய்து முடித்­து­வி­டுங்­கள். பின்­னர், இதையே வாடிக்­கை­யாக்­கிக்­கொள்­ளுங்­கள். அதன் பிறகு, திண­ற­லும் முன­க­லும் நீங்­கி­டும்.

படம்: பிக்சபே