தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாள் விழா

1 mins read
4b982156-63be-487f-a439-a73489b423c8
-

தந்தை பெரி­யா­ரின் 144வது பிறந்­த­நாள் விழா­வைக் கடந்த 18ஆம் தேதி­யன்று சிங்­கப்­பூர் பெரி­யார் சமூக சேவை மன்­றம் ஒரு கலந்­து­ரை­யா­டல் கூட்­ட­மா­கக் கொண்­டா­டி­யது.

ஆனந்த பவன் உண­வ­கத்­தின் இரண்­டாம் தளத்­தில் நடை­பெற்ற இந்த நிகழ்ச்சி­யில், சிங்­கப்­பூ­ருக்கு பெரி­யா­ரின் வருகை­யால் தமி­ழர்­க­ளி­டையே ஏற்­பட்ட மாற்­றங்­கள் பற்­றி­யும் அவ­ரின் பகுத்­த­றிவு சிந்­த­னை­க­ளைப் பற்­றி­யும் வந்­தி­ருந்­தோர் கலந்­து­ரை­யா­டி­னார்­கள்.

மாண­வர்­கள், இளை­யர்­கள், அமைப்பு­க­ளின் தலை­வர்­கள் எனப் பல­ரும் வருகை அளித்­தி­ருந்­த­னர்.

தந்தை பெரி­யாரை நேரில் சந்­தித்த அனு­ப­வப் பகிர்வு, பெரி­யா­ரின் சிறப்­பு­களைப் பாராட்­டும் மூன்று கவி­ஞர்­க­ளின் கவிதை வாசிப்பு ஆகிய அங்­கங்கள் இடம்பெற்றன.

பெரி­யா­ரைப் பற்றி பேசிய பள்ளி மாண­வர்­கள் சில­ருக்கு நினை­வுப் பரி­சும் வழங்­கப்­பட்­டது.

செய்தி/படம்: ஏற்பாட்டுக்குழு