கவிமாலை சந்திப்பில் கவிஞர் நேசமித்ரன்

கவிமாலை சந்திப்பில் கவிஞர் நேசமித்ரன்

1 mins read

ஒவ்வொரு மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்று கவிமாலை அதன் மாதாந்திர சந்திப்பை ஏற்பாடு செய்து வருகிறது. இன்று மாலை 6 மணிக்கு தேசிய நூலகத்தின் 5வது தளத்தில் உள்ள Possibility அறையில் கவிமாலையின் 268வது சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

இம்மாதச் சந்திப்பில் 'என்னைக் கவர்ந்த கவிதைகள்' என்ற தலைப்பில் சங்கீதாவின் அனுபவப் பகிர்வு இடம்பெறவுள்ளது. மேலும், 'புத்தாக்கத்தில் நவீன கவிதைகளின் போக்கும் செல்நெறிகளும்' என்ற தலைப்பில் கவிஞர் நேசமித்ரன் சிறப்புரை ஆற்றுவார்.

கவிஞர் மு.செ.பிரகாஷின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு, பிடித்த, படித்த கவிதைகளை வாசித்தல், 'எழுத்து' எனும் தலைப்பிலான இம்மாதப் போட்டிக் கவிதைகளுக்கான பரிசளிப்பு ஆகிய அங்கங்களும் இடம்பெறவிருக்கின்றன. கவிஞர் நேசமித்ரனுடனான கலந்துரையாடல் அங்கமும் உண்டு. அனுமதி இலவசம்.