புத்தாக்க இந்திய கலையகத்தின் ஒன்றுகூடல்

புத்தாக்க இந்திய கலையகத்தின் ஒன்றுகூடல்

1 mins read
270753bd-bd95-49e0-a1ee-52a0ee8ea3d4
-

புத்­தாக்க இந்­திய கலை­ய­கம் உறுப்­பினர்­க­ளுக்­கான ஒன்­று­கூ­டல் நிகழ்ச்சி கடந்த 17ஆம் தேதி­யன்று நடை­பெற்­றது.

விளை­யாட்­டு­கள், பாடல்­கள், கருத்­தா­டல் எனப் பல்­வேறு அங்­கங்­களில் வந்திருந்த சுமார் 25 உறுப்­பி­னர்­கள் கலந்­து­கொண்­டனர்.

கிட்­டத்­தட்ட ஈராண்­டுகளுக்­குப் பிறகு நேர­டி­யாக நடந்த இந்­நி­கழ்ச்­சி­யில் அமைப்­பின் தலை­வர் சி. குண­சே­க­ரன், தாம் கடந்­து­வந்த பாதை­யில் பெற்ற அனு­ப­வங்­கள், செயற்­குழு உறுப்­பி­னர்­கள் துணை­யு­டன் இணையம் மற்­றும் நேரடி நிகழ்ச்­சி­கள்­வழி அடைந்த வெற்­றி­கள் ஆகி­ய­வற்­றைப் பற்றி பகிர்ந்­தார்.

அமைப்­பின் கலை வளர்ச்­சிக்கு தொடர்ந்து ஊக்­க­மும் ஆத­ர­வும் அங்­கீகா­ரமும் வழங்­கி­வ­ரும் தேசிய கலை­கள் மன்­றம், வளர்­த­மிழ் இயக்­கம், கற்­றல் கற்­பித்­தல் குழு, தமிழ் முரசு, சமூக ஊடகக் கலைக் குழுக்­கள் என அனை­வருக்­கும் நன்­றி­யும் தெரி­வித்­தார்.

நிகழ்ச்­சி­யின் முத்­தாய்ப்­பாக DigitalartsTV எனும் யூடி­யூப் ஒளி­யலை அறி­மு­கம் கண்­டது. இதற்­கான இணைப்பு: https://youtube.com/channel/UCLCr5rTIcxtk0UM65lq_W9g

செய்தி/படம்: ஏற்பாட்டுக்குழு