'பிலாட்டே' பந்தைப் பயன்படுத்தி உடற்பயிற்சி செய்யும், நாற்காலிக்குப் பதிலாக அதைப் பயன்
படுத்தும் அணுகுமுறை பிரபலமாகி வருகிறது. பிலாட்டே பந்து இல்லாத உடற்பயிற்சிக்கூடம் அறவே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பிலாட்டே பந்தின் மீது அமர்வது தண்டுவட எலும்புகளை வலுப்படுத்துகிறது. ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. இதற்கு பிலாட்டே பந்து விதிவிலக்கல்ல. பிலாட்டே பந்தின் மீது அதிக நேரம் அமர்
வதைத் தவிர்ப்பது நல்லது. இப் பந்தின் மீது அமர்ந்திருப்பதில் சாதக, பாதகங்கள் இருக்கத்தான் செய்கின்றன. நாற்காலியில் அமர்ந்திருக்கும்போது உடல் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அங்கும் இங்கும் நகர்வதற்கு தோன்றாது. உடல் இயக்கம்தான் மாறுபடும். ஆனால் பந்தின் மீது அமரும்போது இலேசாக அசைந்தாலே உடல் தன்னைத்தானே நிலை
நிறுத்திக்கொள்வதற்கு முயலும். இதனால் தசைகளும்
தொடர்ச்சியாக வேலை செய்ய வேண்டியிருக்கும்.
இது ஒருபுறம் இருக்க, இதில் அமர்வதால் முதுகுவலி
பிரச்சினை தவிர்க்கப்படும்.
இந்தப் பந்தின் மீது அமர்ந்து பணி செய்வதும் உடற்பயிற்சி செய்வதற்கு இணையானது. ஏனெனில் பந்தை தினமும் பயன்
படுத்த தொடங்கிவிட்டால் உடற்
பயிற்சிக்கு என்று தனியாக நேரம் ஒதுக்க வேண்டியிருக்காது.

