திட்டமிட்டு செய்யும் செலவு நிம்மதி தரும்

செலவுகளைத் திட்டமிடுவது இன்றைய சூழலில் மிகவும் முக்கியம். உங்கள் வரவு செலவுத் திட்டம், தவறான முடிவுகளையும் விரும்பத்தகாத விளைவுகளையும் தவிர்க்க உதவும். இதனால் மன அழுத்தம் குறைந்து நிம்மதி பெருகும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதி­க­ரிக்­கும் வாழ்க்­கைக் செல­ வி­னம், பொரு­ளி­யல் நெருக்­கடி பற்­றிய அச்­சம் போன்­ற­வற்றை எதிர்­நோக்­கும் சூழ­லில் கையில் உள்ள பணம் பற்­றிய கவ­லை­யும் கலக்­க­மம் பல­ருக்­கும் ஏற்­ப­டு­வது ஆச்­ச­ரி­யம் இல்லை.

சிங்­கப்­பூர் ஆண்­களில் பாதிப் பேரின் மன அழுத்­தத்­துக்கு நிதி நில­வ­ரமே ஆகப் பெரிய கார­ணம் என்று டிரே­வ­லோகா நிறு­வ­னம் கடந்­தாண்டு நடத்­திய கருத்­தாய்­வில் தெரிய வந்­தது. பணம் பற்­றிய கவலை சிங்­கப்­பூ­ரர்­க­ளைச் சூழ்ந்­துள்­ளது என்­பதை இது­போன்ற பல ஆய்­வு­கள் தெரி­விக்­கின்­றன.

பெரும் கடன் தொல்லை நம் உற்­றார் உற­வி­ன­ரின் இறப்­பை­விட நம் மனத்தை கலங்­கச் செய்­கிறது.

'கடன்­பட்­டார் நெஞ்­சம்போல் கலங்­கி­னான் இலங்கை வேந்­தன்' என்ற அரு­ணா­ச­லக் கவி­ரா­ய­ரின் வரி­க­ளைப் பலர் நினை­வு­கூ­ர­லாம்.

பணம் பற்­றிய கவலை மனச்­சோர்­வுக்கு இட்­டுச் செல்­லக்­கூ­டி­யது. அது குடும்ப உற­வை­க­ளை­யும் உடல்­ந­லத்­தை­யும் சிதைக்கவல்­லது.

பணத்­தில் நமது சுயஅடை­யா­ள­மும் தன்மதிப்­பும் பின்­னப்­பட்­டுள்­ளது. கையில் பணம் இருந்­தால் குடும்­பத்­தைப் பாது­காக்­கி­றோம், அல்­லது சொந்­தக் காலில் நிற்­கி­றோம் என்ற நிறைவு உண்­டா­கும்.

ஆனால் போதிய பண­மில்லை என்ற மனத் ­த­டு­மாற்­றம், நம்மைக் கையறு நிலை­யில் வைக்­கும், ஊக்­கத்­தைக் குறைக்­கும். நமது சுய­கௌ­ர­வம் பாதிக்­கப்­படும்.

ஆனால் கையி­ருப்பு பற்­றிய கலக்­கத்­தைக் குறைக்க, இப்­போதே ஓர் எளிய வழியை மேற்­கொள்­ள­லாம். முத­லில் நாம் நம் வரவு செல­வைத் திட்­ட­மிட்­டாலே கலக்­கம் குறைந்து மன­த்தில் நிம்­மதி பர­வத் தொடங்­கும்.

வர­வு­செ­ல­வு­க­ளைத் திட்­ட­ மிடும்­போது நாம் 'ஸ்மார்ட்' முறை­யைக் கையாள வேண்­டும் என்று நிதி நிபு­ணர்­கள் ஆலோ­சனை கூறி­யுள்­ள­னர். அதா­வது குறிப்­பிட்ட, கணக்­கி­டக்­கூ­டிய, தங்­க­ளால் எட்­ட­மு­டி­கிற, தங்­க­ளுக்கு ஏற்ற, கால­வ­ரை­யறை உள்ள குறிக்­கோள்­களை உரு­வாக்க இந்த ஸ்மார்ட் முறை உதவி செய்­கிறது.

தங்­க­ளுக்கு முக்­கி­ய­மான இலக்கு­களைக் கண்­டு­கொள்­ள­வும் அவற்றை அடை­வ­தற்குச் செய­லில் இறங்­க­வும் இந்த முறை கைகொ­டுக்­கிறது.

அத­னால் இலக்­கு­களை எட்­டும் சாத்­தி­யம் அதி­க­மா­கிறது. முறை­யான திட்­டம் இருப்­ப­தால் மனத்­தில் ஊக்­கம் அதி­க­மா­கிறது.

மேலும், செல­வு­க­ளைக் கணக்­கிட்டு தொடர்ந்து கண்­கா­ணித்து வரும்­போது, நிதி இருப்­பில் ஏற்­படும் முன்­னேற்­றம் கண்­கூ­டா­கத் தெரி­யும். இத­னால் மனச் சோர்வு குறை­யும். நிலைமை நம் கட்­டுக்­குள் உள்­ளது என்ற எண்­ணம் தோன்­றும்.

மேலும் பணம் எங்­கெங்­கெல்­லாம் செல­வா­கிறது என்று தெரி­ வ­து­டன், கணக்­கு­க­ளைப் பார்க்­கும்­போதே ஊக்­க­மும் தன்­னு­ரிமை உணர்­வும் கூடும் என்று கூறப்­படு­கிறது.

வரவு செலவுத் திட்டம்: வழிகள்

முத­லில் வர­வுக் கணக்கை எழுத வேண்­டும். அடுத்­த­தாக பணம் எங்கே செல­வா­கிறது என்­பதை எழு­திக் கணக்­கிட வேண்­டும். பொது­வா­கவே நமது மனக்­ க­ணக்­கை­விட எழு­தி­வைத்­துப் பார்க்­கும்­போது உண்­மை­யான செல­வுக்­க­ணக்கு அதி­க­மாக இருக்­கும். அத­னால் கட்­டண ரசீ­து­கள், செலவு செய்­த­தற்­கான ஆவ­ணங்­கள் ஆகி­ய­வற்­றைப் பத்­தி­ரப்­ப­டுத்தி எழுதி வைப்­பது முக்­கி­யம்.

கடன் பற்று அட்டை, வங்­கிக் கணக்கு அட்­டை­க­ளைப் பயன்­ப­டுத்திச் செய்­யும் செல­வு­க­ளின் விவ­ரத்தை இணை­யத்­தில் பெற்­றுக் கொள்­ள­லாம்.

அடுத்து, எந்­தெந்த அம்­சங்­களில் எவ்­வ­ளவு செலவு ஆகும் என்­பதை அடை­யா­ளம் காண வேண்­டும் என்று நிதி நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

அதா­வது, குடி­ யிருப்பு, தண்­ணீர் மின்­சா­ரக் கட்­ட­ணங்­கள், காப்­பு­றுதி, போக்­கு­வரத்து, உணவு, பொழு­து­போக்கு போன்­ற­வற்­றுக்கு ஆகும் செலவை மதிப்­பிட வேண்­டும்.

அத்­து­டன் சேமிப்­புக்கு ஒரு தொகை ஒதுக்க வேண்­டும். நாம் போடும் உத்­தேச செல­வுக் கணக்­கும் சேமிப்­புத் தொகை­யும் நமது வாழ்க்கை முறைக்­கும் உண்மை நில­வ­ரத்­துக்­கும் ஒத்­துப்­போ­கிற இயல்­பான தொகை­யாக இருப்­பது முக்­கி­யம்.

அவ­சிய செல­வு­கள், தேவைப்­பட்­டால் குறைத்­துக்­கொள்­ளக் கூடிய செல­வு­கள், நீண்­ட­கால இலக்­கு­கள் என்று செல­வு­களை வகைப் ­ப­டுத்­து­வது பலன்­த­ர­லாம் என்று ஆலோ­ச­கர்­கள் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

அடுத்து, செல­வு­க­ளைத் தொடர்ந்து குறித்­து­வைத்­துக் கொள்­வது மிக முக்­கி­யம். எந்­தப் பிரி­வில் எவ்­வ­ளவு செல­வா­கிறது என்று தெரி­ய­வ­ரும். நீங்­கள் உரு­வாக்­கி­யுள்ள வரவு செல­வுத் திட்­டத்­துக்கு ஏற்­ற­படி செல­வு­கள் உள்­ள­னவா என்­ப­தைத் தெரிந்­து­கொண்டு செல­வு­க­ளை­யும் உங்­கள் திட்­டத்­தை­யும் மாற்றி அமைத்­துக்கொள்ள முடி­யும்.

செல­வு­க­ளைக் கண்­கா­ணித்­துக் குறித்து வைக்க இன்று இணை­யத்­தில் பல எளி­மை­யான செய­லி­கள் உள்­ளன. 'மின்ட்', 'ஸ்பெண்டி', 'வாலி', 'பிளே­னர்பீ' போன்ற செயலி­க­ளைப் பயன்­ப­டுத்­த­லாம். அல்­லது எழு­தி­யும் வைக்­க­லாம்.

தின­மும் எழு­தும் அல்­லது குறிக்­கும் செல­வுக் கணக்­கைப் பார்க்­கும்­போது, செல­வுப் பழக்­கத்தை மேம்­ப­டுத்­திக்கொள்ள வழி­கள் புலப்­படும் என்று நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

இறு­தி­யாக செல­வு­க­ளைத் தொடர்ந்து கணக்­கி­டும்­போது, பாது­காப்­பான நிதி எதிர்­கா­லத்தை நோக்கி அடி எடுத்து வைக்­கி­றோம் என்று நம்மை நாமே பாராட்டி ஊக்­கப்­ப­டுத்­திக்கொள்­வது முக்­கி­யம்.

படிப்­ப­டி­யான முன்­னேற்­றம் பல மாற்­றங்­க­ளைக் கொண்டு வரும் என்று நிபு­ணர்­கள் ஊக்­கு­விக்­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!