கண்ணைக் கவரும் தாய்லாந்தை வாகனத்தில் சுற்றிப் பார்க்கலாம்

நீங்­கள் வாக­ன­மோட்டி என்­றால் உங்­கள் அடுத்த தாய்­லந்து பய­ணத்­தின்­போது, நீங்­களே வாக­னத்­தைச் செலுத்­திச் சுற்­றிப் பார்ப்­பது பற்றி பரி­சீ­லிக்­க­லாம்.

தாய்­லாந்து சாலை­கள் ஆபத்­தா­னவை, பேங்­காக், சியாங் மாய் போன்ற நக­ரங்­களில் போக்­கு­வ­ரத்து நர­கத்­தில் இருப்­பது போன்ற உணர்வை ஏற்­ப­டுத்­தும் என்­ப­தெல்­லாம் உண்­மை­தான்.

ஆனால் நக­ரங்­க­ளுக்கு அப்­பாற்­பட்டு தாய்­லாந்­தின் மற்ற பகு­தி­கள் வாக­ன­மோட்­டு­வ­தற்கு பாது­காப்­ப­ானவை என்­றும் வாக­ன­மோட்­டு­வது வச­தி­யா­ன­தும்கூட என்­றும் செய்­தி­யா­ளர் ரோனன் ஓ' கானல் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்­தா­ளில் கூறி­யுள்­ளார். பல ஆண்­டு­கள் தாய்­லாந்­தில் வசித்த அவர், அங்கு வாக­ன­மோட்டிச் சுற்­றிப் பார்த்த அனு­ப­வத்­தைப் பகிர்ந்து ­கொண்­டார்.

நக­ரங்­க­ளுக்கு வெளியே தாண்­டிச் செல்­லும்­போது தாய்­லாந்­தின் அழகு வியக்க வைக்­கும். அதன் கடற்­க­ரை­யை­யும் தேசிய பூங்­காக்­க­ளை­யும் வடக்­கில் உள்ள மலைப்­ப­கு­தி­க­ளை­யும் முழு­மை­யாக ரசிக்க வைக்­கும் என்­றார் ரோனன்.

தாய்­லாந்­தில் வாகனம் ஓட்­டு­வ­தற்கு சிங்­கப்­பூ­ரின் வாகன உரி­மச் சான்­றி­த­ழும் அனைத்­து­லக வாக­ன­மோட்­டும் சான்­றி­த­ழும் இருக்க வேண்­டும்.

பின்­னர் உங்­கள் வாக­னப் பய­ணத்­தைத் தொடங்­கும் இடத்­தில் உள்ள கார் வாடகை முக­மை­க­ளைப் பற்றி இணை­யத்­தில் தேடிப் பார்க்க வேண்­டும். பெரிய நிறு­வ­னங்­கள்தான் சிறந்­தவை என்­றா­கி­வி­டாது. சிறிய நிறு­வ­னங்­களும் நல்ல பயண அனு­ப­வத்­தைக் கொடுக்­கும். அத­னால் வாடிக்­கை­யா­ளர்­கள் இணை­யத்­தில் பதி­வி­டும் கருத்­து­க­ளைப் படித்­து­விட்டு நிறு­வ­னத்­தைத் தேர்ந்­தெ­டுக்க வேண்­டும் என்று ரோனன் குறிப்­பிட்­டார்.

பாது­காப்பு கருதி டொயோட்டா ஃபோர்ரன்­னர் போன்ற பெரிய காரை வாட­கைக்கு எடுக்­க­லாம் என்­றும் அவர் பரிந்­து­ரைத்­தார். நாள்­வா­ட­கை­யும் காப்­பு­று­தி­யும் 60 வெள்­ளிக்­குள் கிடைக்­கும் என்று அவர் கூறு­கி­றார். டாக்சி எடுப்­பதை­விட இது பல நேரங்­களில் பணத்தை மிச்­சப்­ப­டுத்­தும் என்­கிறார் ரோனன்.

கர­டு­மு­ர­டா­க­வும் ஒதுக்­குப்­பு­ற­மா­க­வும் இல்­லாது வெளி­நாட்டு ஓட்­டு­நர்­க­ளுக்கு ஏற்ற சீரான சாலை­கள் தாய்­லாந்­தில் உண்டு என்று இவர் கூறுகிறார்.

சுய­மாக வாக­ன­மோட்­டிச் செல்­லும்­போது சுற்­றுப்­ப­ய­ணி­கள் அதி­கம் செல்­லும் இடங்­ க­ளைத் தவிர்த்­து­விட்டு, பல தனித்­து­வ­மான, இனிய அனு­ப­வங்களைத் தரும் இடங்­களுக்­குப் போக முடி­யும்.

மே ஹோங் சொன் வளை­யப் பாதை

அவர் பரிந்­துரை செய்­யும் இடங்­களில் ஒன்று மே ஹோங் சொன் வளை­யப் பாதை­யா­கும். தாய்­லாந்­தின் வடக்­கில் உள்ள சியாங் மாயில் தொடங்கி, அங்­கேயே இந்­தச் சுற்­றுப்­ப­ய­ணத்தை முடிக்­க­லாம். சுமார் 600 கிலோ­மீட்­டர் தொலை­வுள்ள இப்­பாதை மிக­வும் பிர­ப­ல­மா­கும். தாய்­லாந்­தின் வடக்­கில் உள்ள மலை­கள், மிகப் பெரும் குகை­கள், மலை­வாழ் கிரா­மங்­கள், தேயி­லைத் தோட்­டங்­கள், மே ஹோங் சொன் போன்ற அழ­கிய ஊர்­கள் வழி­யாக இப்­பா­தை­யில் செல்­ல­லாம்.

இயற்கை எழில் நிறைந்த இப்­பாதை நீண்ட, வளை­வான சாலை­கள் கொண்­டது. இருப்­பி­னும், அவை பாது­காப்­பா­னவை என்று ரோனன் சொல்கிறார்.

பேங்­காக் முதல் பேங்­காக் வரை

450 கிலோ­மீட்­டர் தூரம் நீளும் இப்­பா­தை­யில், பேங்­காக்­கி­லி­ருந்து வடக்கு நோக்கி செல்­ல­லாம். முத­லில் தாய்­லாந்­தின் முன்­னைய தலை­ந­க­ரான அயூத்­தி­யா­வுக்கு சென்­று­விட்டு, லோப் பூரி­யில் உள்ள குரங்கு ஆல­யங்­க­ளைக் கண்­டு­விட்டு பின்­னர் காட்டு யானை­க­ளுக்­கும் புலி­ களுக்­கும் புக­லி­ட­மாக உள்ள காவ் யாய் தேசிய பூங்­கா­வுக்­குச் செல்­ல­லாம்.

கிரா­பி­யி­லி­ருந்து புக்­கெட் தீவுக்கு

இப்பாதை கிராபி விமான நிலை­யத்­தில் தொடங்­கு­கிறது. ஆவ் நாங் கடற்­க­ரைப் பகுதி, பாங்-கா தேசிய பூங்கா, காவ் லாக் கடற்­கரை ஆகி­ய­வற்­றுக்­குச் சென்று கடை­சி­யாக புக்­கெட் செல்­ல­லாம். இது சுமார் 250 கிலோ­மீட்­டர் தூர­முள்ள பய­ண­மாக இருக்­கும் என்­றும் இரண்டு நாள் முதல் ஒரு வாரத்­தில் இதை முடித்­து­வி­ட­லாம் என்­றும் ரோனன் கூறி­னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!