உலகளாவிய உணவுப் பழக்கம்: 30 ஆண்டுகளில் சொற்ப முன்னேற்றம்

உல­க­ளா­விய உண­வுப் பழக்­கம் 30 ஆண்­டு­களில் மிகச் சிறிய முன்­னேற்­றம் மட்­டுமே கண்­டுள்­ள­தாக ஆய்­வா­ளர்­கள் கூறி­யுள்­ள­னர்.

நேச்­சர் ஃபுட் என்ற ஆய்­வி­த­ழில் வெளி­யி­டப்­பட்ட ஆய்வு இதைத் தெரி­வித்­தது. கடந்த 1900ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை, 185 நாடு­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளின் உண­வுப் பழக்­கம் ஆய்வு செய்­யப்­பட்­டது.

உல­க­ளா­விய மாற்று உண­வுப் பழக்­கக் குறீ­யிடு 30 ஆண்­டு­களில் 1.5 புள்­ளி­கள் மட்­டுமே உயர்ந்­த­தாக ஆய்வு கூறி­யது.

அத்­து­டன், மோச­மான உண­வுப் பழக்­கம், உல­கில் தடுக்­கக்­கூ­டிய 26 விழுக்­காட்டு மர­ணங்­க­ளுக்­குக் கார­ண­மாய் உள்­ளதாக ஆய்வு கண்­ட­றிந்­தது.

சில வகை மக்­க­ளின் உண­வுப் பழக்­கம் மட்­டுமே மேம்­பட்­டது என்று ஆய்­வா­ளர்­கள் தெரி­வித்­த­னர். பணக்­கார நாடு­களில் உள்­ள­வர்களின் உண­வுப் பழக்­கத்­தில் முன்­னேற்­றம் காணப்­பட்­டது. ஏழை­க­ளின் உண­வுப் பழக்­கம் தேக்­கம் அடைந்­தது.

உண­வும் உல­க­ம­ய­மா­கி­விட்­ட­தால், முன்­னர் கிடைக்­காத உணவு­ கள் இப்­போது எளி­தா­கக் கிடைப்­ப­தாக ஆய்­வா­ளர்­கள் கூறி­னர்.

ஆனால், அவற்­று­டன் சேர்த்து உட­லுக்கு நன்மை பயக்­காத பதப் படுத்­தப்­பட்ட உண­வும் பர­வ­லா­கி­விட்­ட­தை­யும் அவர்­கள் சுட்­டி­னர்.

அது மட்­டு­மல்­லாது, உண­வுப் பழக்­கம் பண்­பாடு சார்ந்­தது என்­றும் சில உண­வு வகைகள் ­நம் உட­லுக்கு நல்­ல­தல்ல என்று தெரிந்­தா­லும் அவற்­றைத் தவிர்த்­து­விட்டு வேறு நல­மிக்க உண­வு­ வகை களுக்கு மாறு­வது அவ்வளவு எளிது அல்ல­ என்­றும் அவர்­கள் குறிப்­பிட்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!