நாசாவின் சாதனை: மோதி திசைதிருப்பப்பட்ட சிறுகோள்

நாசாவின் சாதனை: மோதி திசைதிருப்பப்பட்ட சிறுகோள்

1 mins read
f70afe0c-7bea-42fb-95f2-c98e710a9dd8
'டார்ட்' விண்கலம் 'டைமார்ஃபோஸ்' சிறுகோள்மேல் மோதுவதற்கு முன்னர் அனுப்பிய இறுதிப் படம். படம்: ஏஎஃப்பி -

அமெ­ரிக்க விண்­வெளி நிறு­வ­ன­மான நாசா, 'டைமார்­ஃபோஸ்' எனும் சிறு­கோள்­மீது விண்­க­லத்தை வெற்­றி­க­ர­மாக மோதச்­செய்து அதை திசை­தி­ருப்பி, சாதனை படைத்­துள்­ளது.

சிங்­கப்­பூர் நேரப்­படி நேற்­றுக் காலை ஏழு மணி­ய­ள­வில் சிறு­கோள்­மீது நாசா­வின் 'டார்ட்' விண்­க­லம் வெற்­றி­க­ர­மாக மோதி அதைத் திசை­தி­ருப்­பி­யது.

பூமி­யி­லி­ருந்து 11 மில்­லி­யன் கி.மீ. தொலை­வில் உள்ள அந்­தச் சிறு­கோள் ஒரு காற்­பந்து அரங்­கத்­தின் அள­வைக் கொண்­டது. அத­னால் பூமிக்கு ஆபத்து ஏற்­படும் என்று கரு­தப்­ப­டா­விட்­டா­லும் சோதனை முயற்­சி­யாக அதனை விண்­க­லத்­தால் மோதி திசை­தி­ருப்ப முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­டது.

எதிர்காலத்தில் ஆபத்­தான விண்­கற்­க­ளின் மோத­லில் இருந்து பூமியைத் தற்­காத்­துக்­கொள்­ளும் உத்­தியை வகுக்க இது உத­வும் என்று கருதப்­ப­டு­கிறது.

இதனை முன்­னிட்டு, ஏறக்­குறைய பத்து மாதங்­க­ளுக்கு முன்­னர் 'டார்ட்' விண்­க­லம் விண்­ணில் செலுத்­தப்­பட்­டது.

இந்­தத் திட்­டத்­தின்­கீழ், ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட விஞ்­ஞா­னி­கள், ஏறக்­கு­றைய ஏழு ஆண்­டு­கள் பணி­யாற்­றி­வந்­துள்­ள­னர்.

இந்தச் சாதனை மனிதகுல வரலாற்றில் ஒரு மைல்கல்லாகக் கருதத் தக்கது என்பதை நாசா சுட்டியது.