வாட்ஸ்அப்பின் புதிய வசதிகள்

வாட்ஸ்அப்பின் புதிய வசதிகள்

1 mins read

வாட்ஸ்­அப் செயலி விரை­வில் சில புதிய வச­தி­களை அறி­மு­கப்படுத்த இருக்கிறது.

குழு அழைப்­பு­க­ளுக்கு 'லிங்க்' எனப்­படும் தொடர்­புச் சுட்­டியை உரு­வாக்­கும் வசதி இவற்­றில் ஒன்று. குரல் அழைப்பு, காணொளி அழைப்பு இரண்­டுக்­கும் இது பொருந்­தும். இதன்­மூ­லம் குழு­வில் ஒரு­வர் அழைப்பு தொடங்­கும்­போது இணை­யத் தவ­றி­னா­லும் பிறகு இணைந்­து­கொள்ள முடி­யும்.

செய­லி­யின் மேம்­ப­டுத்­தப்­பட்ட வடி­வத்­தைப் பய­னா­ளர்­கள் தர­வி­றக்­கம் செய்­­வது அவ­சி­யம்.

தற்­போது வாட்ஸ்­அப் செயலியில் அதி­க­பட்­சம் எட்­டுப் பேரை குழு அழைப்பு வசதி மூலம் அழைக்­க­லாம். இந்த எண்­ணிக்­கையை 32க்கு உயர்த்­தத் திட்­ட­மி­டு­கிறது நிறு­வ­னம்.