வீட்டின் அளவு சிறியதாக இருந்தால் எவ்வாறெல்லாம் இடத்தைக் குறைவாகப் பயன்படுத்தலாம் என்று சிந்திப்பது நமக்கு வழக்கம்.
இத்தகையோருக்கு நற்செய்தியாக, பயன்படுத்தாத நேரங்களில் சுவரில் மாட்டக்கூடிய மின்சார அடுப்பு (படம்) விற்பனைக்கு வந்துள்ளது.
புத்தாக்கத்தில் முத்திரை பதித்திருக்கும் இத்தாலியின் 'ஃபபிடா' நிறுவனம் இதனை அறிமுகம்செய்துள்ளது. தானியக்க முறையில் அடுப்பை அணைக்கும் வசதி உள்ளிட்ட பல வசதிகளைக் கொண்ட இதன் விலை 430 டாலர்.

