கந்தகச் சத்து அதிகமுள்ள சின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்துக்கொள்வது உடல் வலிமையை அதிகரிக்கும். அதிலும் தேனில் ஊற வைத்த வெங்காயம் என்றால் கூடுதல் பலனைத் தரும்.
தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் தேனில் ஊறவைத்த சின்ன வெங்காயத்தைச் உண்டு வந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுகளை நீக்கி, ரத்த ஓட்டம் சீராகும்.
தேன், சின்ன வெங்காயம் இரண்டிலும் மூப்பை உண்டாக்கும் உயிர்வாயு ஏற்றிகளை எதிர்க்கும் அணுக்கள் அதிகம்.
இரண்டையும் ஒன்றாக உட்கொண்டால் நோய் எதிர்ப்பு ஆற்றல் கூடும். மேலும், செரிமாணக் கோளாறுகள், தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் குறையும். வயிற்றுக் கொழுப்பு கரையும்.
இரவில் தேனில் சின்ன வெங்காயம் கலந்து உண்டால், நெஞ்சு சளி குறையும்.
ஒரு சுத்தமான பாத்திரம் அல்லது கண்ணாடி போத்தலை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதில் நன்கு தோலுரித்து இரண்டாகக் கீறிய சின்ன வெங்காயத்தைப் போட வேண்டும்.
சின்ன வெங்காயம் மூழ்கும் அளவுக்குத் தேனை ஊற்ற வேண்டும் அது தேனில் நன்கு ஊறும். அக்கலவையை இரண்டு நாள்கள் ஓரமாக கைபடாமல் எடுத்து வைக்கவேண்டும்.
இரண்டு நாள்கள் கழித்து சின்ன வெங்காயத்தில் தேன் நன்றாக இறங்கி, வெங்காயத்தில் உள்ள நீர்ச்சத்தும் தேனுடன் சேர்ந்து ஊறியிருக்கும். இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரவேண்டும்.

