எஃப்1 கார் பந்தய விறுவிறுப்பில் இவருக்கும் ஒரு பங்குண்டு

மாதங்கி இளங்­கோ­வன்

இன்று எஃப்1 கார் பந்­த­யம் தொடங்­கு­கிறது. மத்­திய வர்த்­தக வட்­டாரத்­தில் பந்­த­யக்­கா­ரர்­க­ளின் சத்­தத்­துக்­கும் கட்­ட­டங்­க­ளின் உய­ரத்­துக்­கும் சாலை­க­ளின் வண்­ண­மிகு விளக்கு­க­ளுக்­கும் இடையே, மக்­கள் இப்­பந்­த­யத்தை ஆர­வா­ரத்­து­டன் காணக் காத்­தி­ருக்­கின்­ற­னர். ஈராண்டு கொள்­ளை­நோய் பர­வல் கார­ணத்­தால் ஏற்­பட்ட இடை­வெ­ளியை, கடந்து மீண்­டும் சிங்­கப்­பூ­ரில் எஃப்1 கார் பந்­த­யம் நடக்­கி­றது.

இடை­வெளி இருந்­தால் என்ன, உற்­சா­கத்­திற்­குக் குறை­வில்லை எனப் பல­ரும் இருக்க, அவர்­களில் திரு சுப்­பையா ராம­சந்­தி­ர­னும் ஒரு­வர். மொத்­தம் 13 பந்­த­யங்­களில் பணி­யாற்­றிய அனு­ப­வங்­கொண்ட திரு சுப்­பையா, தொடர்ந்து இந்த ஆண்­டும் அவ­சரநிலை ஒருங்­கி­ணைப்­பா­ள­ராக தம் பணி­யைத் தொடங்க ஆவ­லு­டன் காத்­தி­ருக்­கி­றார்.

கார் பந்­த­யத் துறை­யில் அதிக அனு­ப­வ­முள்ள இவர், 55 தொண்­டூ­ழி­யர்­க­ளுக்­குத் தலை­வ­ராக இருப்­ப­து­டன் அசம்­பா­வி­தம் ஏதே­னும் நடக்­கு­மா­யின் அதற்­குத் தொண்­டூ­ழி­யர்­கள் தயார்­நி­லை­யில் இருப்­ப­தை­யும் உறு­தி­செய்­கி­றார்.

ஆசிய பசி­பிக் சுற்­றுச்­சூ­ழல் பாது­காப்பு மேலா­ள­ராக அடுத்த மூன்று நாள்­க­ளுக்­குப் பந்­த­யத் தடத்­தில் தம் முழுக் கவ­னத்­தை­யும் வைத்­தி­ருப்­பார் சுப்­பையா.

பந்­த­யத்­திற்­காக ஆறு மாதங்­கள் முன்­னரே ஆயத்­தப் பணி­கள் தொடங்­கி­விட்­டன.

"நாம் நமது மீட்­புக் கையேடை ஆராய்ந்து ஒவ்­வோர் ஆண்­டின் பந்­த­யத்­திற்­கேற்ப மாற்­றங்­கள் செய்­வோம். தொண்­டூ­ழி­யர்­க­ளுக்­குத் தேவை­யான பயிற்­சி­க­ளை­யும் ஆராய்ந்து அவர்­க­ளுக்கு ஏற்­றாற்­போல் மாற்­றங்­க­ளைச் செய்­து­விடு­வோம்," என்­றார் சுப்­பையா.

ஒவ்­வோர் ஆண்­டும் மறக்க முடி­யாத அனு­ப­வங்­கள் பல­வற்­றைப் பெற்று வந்­த­தாக தெரி­விக்கும் இவர், தொண்­டூ­ழி­யர்­கள், பங்­கேற்­பா­ளர்­கள், ஓட்­டு­நர்­கள் என அனை­வ­ரும் பாது­காப்­பாக இருப்­பதே தமது நோக்கம் என்­கிறார். சிங்­கப்­பூர் மோட்­டார் சைக்­கிள் சமூ­கத்­தி­லும் துடிப்­பு­டன் பங்­கேற்று அதனை மேம்­ப­டுத்­தி­வ­ரும் இவர், தம் குடும்­பத்­தி­னர் வழங்­கும் ஆத­ர­வும் நம்­பிக்­கை­யும் தமக்கு ஒரு வர­மாக அமைந்­துள்­ள­தாக தெரி­வித்­தார்.

"மோட்­டார் பந்­த­யங்­கள் அபா­யம் நிறைந்தவை என்பதால் நான் அவற்றை அதி­கம் விரும்­பு­வ­தற்கு ஒரு கார­ண­மா­கும். இருப்­பி­னும் மோட்­டார் பந்­த­யங்­களில் ஆபத்து என்­பது இயல்பான ஒன்று. விறு­வி­றுப்­பின் ஒரு பகுதி அது. அந்த அம்­சத்தை மோட்­டார் விளை­யாட்டு­களில் அகற்­று­வது எங்­கள் வேலை­யல்ல. மிகச் சிறந்த நடை­மு­றை­களைக் கையாண்டு, ஆற்­ற­லு­டன் சிந்­தித்து, அபா­யங்­க­ளைச் சமா­ளிக்­கும் ஆகச் சிறந்த திட்­டத்­துடன் செயல்­ப­டு­வதே எங்­களின் பணி," என்­றார் சுப்­பையா.

இவ்­வாண்­டின் எஃப்1 பந்­த­யம் அக்­டோ­பர் 2ஆம் தேதி­யன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. அதனை நேர­டி­யா­க­வும் தொலைக்­காட்­சி­ வ­ழி­யா­க­வும் கண்டு ரசிக்­க­லாம். கடந்த 2019ஆம் ஆண்டு நடை­பெற்ற பந்­த­யத்­தில் ஃபெராரி கார் குழு­வின் செபேஸ்­டி­யன் வெட்­டல் வெற்றி பெற்­றார். அவ­ரைத் தொடர்ந்து இவ்­வாண்­டின் வெற்றி­யா­ளர் யாரெ­னத் தெரிந்­து­கொள்ள சிங்­கப்­பூ­ரர்­கள் பெரும் ஆவ­லு­டன் காத்­தி­ருக்­கின்­ற­னர்.

அடுத்த மூன்று நாள்­க­ளுக்கு எஃப்1 பற்­றிய செய்­தி­களை அறிந்­திட தமிழ் முர­சின் இணை­யத்­த­ளத்­து­ட­னும் சமூக ஊட­கத் தளங்­களு­ட­னும் இணைந்­தி­ருங்­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!