எஃப்1 துளிகள்

எஃப்1 துளிகள்

2 mins read
de79a711-da39-4d1e-96a5-45e5e08afd22
-
multi-img1 of 2

'சிங்கப்பூரின் இரவுநேரப் பந்தயமே

புதிய எஃப்1-ன் கதாநாயகன்'

புதிய 'ஃபார்முலா ஒன்'னின் கதாநாயகனாக சிங்கப்பூரின் மரினா பே இரவுநேரப் பந்தயம் விளங்குவதாக எஃப்1 தலைமை நிர்வாகி ஸ்டெஃபானோ டொமெனிக்காலி புகழாரம் சூட்டியுள்ளார். ஒரு சுற்றுப்பயணத் தளத்தை வாழ்க்கைமுறை, இசை, கவர்ச்சி அம்சங்களுடன் கலந்து சிங்கப்பூர் வழங்குவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு வழங்கிய பிரத்தியேகப் பேட்டியில் 57 வயது டொமெனிக்காலி தெரிவித்திருந்தார். பந்தயத்தடத்திலும் தலைசிறந்த கிராண்ட் பிரீயை ஏற்பாடு செய்வதிலும் நான், நீ என்ற போட்டி கடுமை என்றார் அவர்.

'எஃப்1 முடியும்வரை முழுவீச்சுதான்'

ஏழு முறை 'ஃபார்முலா ஒன்' உலகக் கிண்ணத்தை வென்றுள்ள மெர்சிடிஸ் குழுவின் லுயிஸ் ஹேமில்டன், இந்த எஃப்1 பருவம் முடியும்வரை தமது தாக்குதல் முழுவீச்சில் இருக்கும் என்று சூளூரைத்துள்ளார். நடப்பு வெற்றியாளரான ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன், மீண்டும் கிண்ணத்தை வெல்வார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இரண்டாவது நிலையைக் கைப்பற்ற அடுத்த ஆறு பந்தயங்களை வெற்றிபெறுவதற்கான ஆறு வாய்ப்புகளாகக் கருதித் தாம் முழுவீச்சாகத் தாக்குதல் நடத்தப் போவதாக ஹேமில்டன் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் வெற்றிக்கனி கிட்டினால்

வெர்ஸ்டாப்பனுக்கு இது அமோக ஆண்டு

எஃப்1 பந்தயம் தொடர்பான ஒட்டுமொத்த புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் ரெட் புல் அணியின் 24 வயது மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் உள்ளார். 116 புள்ளி வித்தியாசத்தில் ஃபெராரியின் சார்ல்ஸ் லெக்லெர்க் இரண்டாவது நிலையில் இருக்கிறார்.

"வெற்றிபெறும்போது அது மகிழ்ச்சி தரும் ஓர் உணர்வு. ஆனால் எல்லாமே மிக விரைவில் மாறிவிடலாம் என்பதையும் நான் அறிவேன். இனிவரும் பந்தயங்களில் மேலும் எவ்வாறு சிறப்பாகச் செய்யலாம் என்பதை நோக்கித் திட்டமிட வேண்டுமே தவிர வெற்றித் தருணத்தில் லயித்து சோம்பேறி ஆகிவிடக்கூடாதுதானே?" என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு வழங்கிய பிரத்தியேகப் பேட்டியில் கூறினார்.