சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முன்னாள் தலைவர் அமரர் சுப. அருணாசலம் நினைவாக அவரின் குடும்பத்தாரது நிதியாதரவுடன் 'சூழலுக்குப் பாடல் எழுதும் போட்டி' முன்னதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான இறுதி நாள் அடுத்த மாதம் 7ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர், http://singaporetamilwriters.com/suba எனும் இணைப்புவழி கூகல் படிவத்திற்குச் சென்று அதனை நிரப்பிப் பாடல்களுடன் அனுப்ப வேண்டும்.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் கவியரசு கண்ணதாசன் விழாவை ஒட்டி இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் அதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி சிங்கப்பூர் சூழலில் பாடல் வரிகள் அமைய வேண்டும்.
ஒருவர் அதிகபட்சம் மூன்று பாடல்கள் அனுப்பலாம். ஒரு பல்லவி மற்றும் நான்கு சரணங்கள் இருக்க வேண்டும். ஒவ்வொன்றிலும் நான்கு வரிகளென மொத்தம் 20 வரிகள் மட்டுமே இருக்க வேண்டும். சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றவர்களும் நிரந்தரவாசிகளும் போட்டியில் பங்கேற்கலாம்.
மேல்விவரங்களுக்கு திரு. நா. ஆண்டியப்பன் 97849105; திரு. சு. முத்துமாணிக்கம் 96753215; திருவாட்டி கிருத்திகா kiruthikavirku@gmail.com, திரு. கோ. இளங்கோவன் 91216494; திருவாட்டி மலையரசி 97826039 ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம், அல்லது இணையத் தளத்தை நாடலாம்.
நடுவர்களால் தேர்வு செய்யப்படும் மூன்று பாடல்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். இதன்படி முதல் பரிசாக 300 வெள்ளியும் இரண்டாம் பரிசாக 250 வெள்ளியும் மூன்றாம் பரிசாக 150 வெள்ளியும் வழங்கப்படும்.
முதல் பரிசு பெறும் பாடல் இசையமைக்கப்பட்டு கண்ணதாசன் விழாவில் ஒலிபரப்பப்படும்.

