காப்பி குடிப்பதற்கும் நீண்ட ஆயுளுடன் இருப்பதற்கும் இடையே தொடர்பிருப்பதாக புதிய ஆய்வு ஒன்று கூறியுள்ளது. காப்பி குடிக்கும்போது இதய நோய் குறையும் என்றும் ஆய்வு கண்டறிந்தது.
தடுக்கக்கூடிய இதயநோய் களுக்கான ஐரோப்பிய ஆய்விதழில் ஆய்வு வெளியிடப்பட்டது. குறிப்பாக தினமும் இரண்டு அல்லது மூன்று முறை காப்பி குடிப்பது பலன் வாய்ந்தாக இருந்தது.
ஆனால் அதை மிஞ்சினால் கெடுதல் என்று ஆய்வு முடிவுகள் கூறின.
அரைத்த காப்பிக் கொட்டை இன்ஸ்டன்ட், 'கேஃபின்' நீக்கப்பட்ட காப்பி என எல்லா வகையும் பலன் தந்தது.
அவற்றில் அரைத்த காப்பிக் கொட்டையே அதிக பலன்மிக்கதாய் இருந்தது.

