பாண்டிச்சேரியில் பலருக்கும் தெரியாத இடத்துக்கு ஒரு சுவையான பயண அனுபவம் ஆக உயரமான 27 அடி சனீஸ்வரன் சிலை

எஸ். விக்­னேஸ்­வரி

எனக்கு மிக­வும் பிடித்த இடங்­களில் தமிழ்­நாட்­டின் புதுச்­சே­ரிக்கு தனி­யி­டம் உண்டு.

அரிக்­க­மேடு, பரங்­கிப்­பேட்டை, என வர­லாற்­றுச் சுவ­டு­கள் நிறைந்த தலங்­களும் இயற்கை எழில்­மிக்க இடங்­களும் புதுச்­சே­ரி­யி­லும் அதன் சுற்­று­வட்­டா­ரத்­தி­லும் நிறைந்­துள்­ளன. நான் பல­முறை சென்று பார்த்­தும் ரசித்த இடம் அது.

இந்­தி­யா­வுக்கு அண்­மை­யில் சென்­றி­ருந்­த­போது, மீண்­டும் புதுச்­சே­ரிக்­குச் செல்­லத் திட்­ட­மிட்­டேன். அப்­போது நண்­பர் ஒரு­வர் புதுச்­சே­ரிக்கு அருகே உள்ள ஒரு நவ­கி­ர­கக் கோவி­லுக்­குச் செல்­லு­மாறு என்­னி­டம் கூறி­னார்.

அக்­கோ­வி­லைச் சென்று பார்க்க எனக்கு பெரிய ஆர்­வம் இல்­லை­யென்­றா­லும், சரி என்று ஒப்­புக்­கொண்­டேன்.

புதுச்­சே­ரியை சென்­ற­டைந்­த­தும், கடற்­க­ரை­கள், ஆன்­மி­கத் தலங்­கள், உண­வ­கங்­கள் என நான் வழக்­க­மாக செல்­லும் இடங்­க­ளுக்­குச் சென்­றேன். கூடு­த­லாக ஒரு நாள் புதுச்­சே­ரி­யில் தங்­கி­யி­ருந்­த­தால், என் நண்­பர் சொன்ன கோவி­லைச் சென்று பார்க்­க­லாம் என்று முடி­வெ­டுத்­தேன்.

நான் தங்­கி­யி­ருந்த ஆரோ­வில் பகு­தி­யி­லி­ருந்து சுமார் ஐந்து கிலோ­மீட்­டர் தொலை­வில் விழுப்­பு­ரம் மாவட்­டத்­தில் உள்­ளது மொரட்­டாண்டி எனும் ஒரு சிறிய கிரா­மம். அங்­கு­தான் அமைந்­துள்­ளது அந்த நவ­கி­ரக ஆல­யம். மொரட்­டாண்டி என்ற பெயரே வித்­தி­யா­ச­மாக இருந்­தது. அதன் பின்­ன­ணி­யைப் பிறகு தான் தெரிந்­து­கொண்­டேன். இந்த கிரா­மத்­தில் ஒரு சித்­தர் பல ஆண்டு களுக்கு முன்­னர் வாழ்ந்து வந்­த­தா­க­வும் அவர் முரட்­டாண்டி என்று அழைக்­கப்­பட்­டி­ருக்­க­லாம் என்­ப­தா­லும் கிரா­மத்­துக்கு அப்­பெ­யர் வந்­த­தா­கக் கூறு­கின்­ற­னர்.

கோவில் வாச­லில் நின்­ற­போது, இங்கு வந்­த­தில் பெரிய பய­னில்லை என்று எனக்கு முத­லில் தோன்­றி­யது.

மொரட்­டாண்டி என்ற கிரா­மத்­தில் அமைந்­தி­ருந்­தா­லும் கோவில் மிக­வும் அமை­தி­யாக இருந்­தது. பய­ணி­கள் பார்த்து வியக்­கும் தொன்­மை­யான இந்­துக் கோவில்­களில் உள்ள உய­ர­மான கோபு­ர­மும் வெளியே வரி­சை­வ­ரி­சை­யாக கடை­களும் அங்கு இல்லை. பக்­தர் களின் ஆர­வா­ர­மும் இல்லை.

இந்­தக் கோவி­லில் என்­ன­தான் சிறப்பு என்ற ஐயத்­து­டனே ஆல­யத்­துக்­குள் அடி­யெ­டுத்து வைத்­தேன். கோவிலை வலம் வரும்­போது முத­லில் ஒரு சிறிய விநா­ய­கர் சிலை இருந்­தது.

அடுத்­த­தாக முரு­கன், வள்ளி, தெய்­வானை சிலை­கள். கோவி­லின் நடுவே வந்து நின்­ற­போ­து­தான், இந்­தக் கோவி­லு­டைய சிறப்பு கண்­க­ளுக்­குப் புலப்­பட்­டது.

உய­ர­மான சனீஸ்­வ­ரன் சிலை

மிளி­ரும் தங்க நிறத்­தில் உய­ர­மான சனீஸ்­வ­ர­ரின் உரு­வச் சிலை என்னை அண்­ணாந்து பார்க்க வைத்­தது. 27 அடி உய­ரத்­தில் பிரம்­மாண்­ட­மாக அமைக்­கப்­பட்­டுள்­ளது இச்­சிலை. பீடத்­தின் உய­ரத்­தைச் சேர்த்­துக்­கொண்­டால், முழு உய­ரம் 33 அடி­யா­கும்.

உல­கின் ஆக உய­ர­மான சனீஸ்­வ­ரன் சிலை அது என்று அங்­கி­ருந்த கோவில் ஊழி­யர் ஒரு­வர் என்­னி­டம் கூறி­னார். அந்­தச் சிலைக்கு மேல் இருந்த பதா­கை­யும் அதையே கூறி­யது.

'ஸ்ரீ விஸ்­வ­ரூப மகா­ச­னீஸ்­வர பக­வான்' என்ற பெய­ரில் அங்­குள்ள சனீஸ்­வ­ரரை இந்­துக்­கள் வணங்­கு­கின்­ற­னர். அத்­தனை பெரிய ஐம்­பொன் சிலையை வடித்­தி­ருந்த னர்.

நான்கு கைக­ளு­டன் காட்சி யளிக்­கிறது சனீஸ்­வ­ரர் சிலை. மேலே உள்ள கரங்­கள் அம்­பை­யும் வில்­லை­யும் ஏந்­து­கின்­றன. கீழே உள்ள கரங்­களில் முத்­தி­ரை­கள் காணப்­ப­டு­கின்­றன. சனீஸ்­வ­ர­ரின் வாக­னம் காக்கை எனக் கரு­தப் படு­கிறது. இந்த கோவி­லில் மட்­டும் காக்­கை­யு­டன் இல்­லா­மல் கழுகு வாக­னத்­து­டன் சனீஸ்­வ­ரர் சிலை காட்­சி­ய­ளிக்­கிறது.

சனி கிர­கத்­தால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் இங்கு வந்து இவரை வழி­பட்­டால் எப்­ப­டிப்­பட்ட துன்­பங்­களும் நீங்­கும் என்­பது நம்­பிக்கை என்று கோவில் ஊழி­யர் குறிப்­பிட்­டார்.

நவ­கி­ர­கம், நட்­சத்­தி­ரச் சிலை­கள்

இந்­தக் கோவி­லில் உள்ள மற்ற நவக்­கி­ர­கச் சிலை­கள் ஒவ்­வொன்­றும் கிட்­டத்­தட்ட 15 அடி உய­ரத்­தில் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

ஒவ்­வொரு நவ­கி­ர­க­மும் அவை பார்க்க வேண்­டிய திசை­யில் அவற்­றுக்கு உரிய வாக­னத்­தோடு காட்­சி­ய­ளிக்­கின்­றது. ஒவ்­வொரு கற்­சி­லை­யின் அடி­யி­லும் சிறிய சிவ­லிங்­கம் ஒன்று வைக்­கப்­பட்­டுள்­ளது.

கோவி­லைச் சுற்றி பசு­மை­யான தோட்­டம் உள்­ளது. வெயில் சுட்­டெ­ரித்த பக­லில் தோட்­டத்தை அலங்­க­ரிக்­கும் மரங்­களும் செடி­களும் மென்­மை­யான காற்­றும் இத­மாக்­கின.

இந்­தப் பூந்­தோட்­டத்­தைச் சுற்றி பஞ்­சாங்­கத்­தில் உள்ள 27 நட்­சத்­தி­ரங்­க­ளின் வண்­ண­மிகு சிலை­கள் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளன.

ஒவ்­வொரு நட்­சத்­தி­ரத்­திற்­கும் காவல் தெய்­வ­மாக ஒரு தேவதை உள்­ளது என்ற நம்­பிக்கை உள்­ளது என்று இங்கு வந்த பிற­கு­தான் அறிந்­து­கொண்­டேன்.

சில தேவ­தை­கள் கோவில் சிற்­பங்­கள்­போல் இருந்­தா­லும், வேறு சில தலை, கால் போன்ற உடல் உறுப்­பு­கள் இல்­லா­மல் வேறு­பட்டு காட்­சி­ய­ளித்­தன.

மேலும், ஒவ்­வொரு நட்­சத்­தி­ரத்­திற்­கான மரம், 12 ராசி­க­ளுக்­கும் உகந்த மரங்­கள், ஒன்­பது கிர­கங் களைக் குறிக்­கும் மரங்­கள், 60 ஆண்­டு­க­ளுக்­கான மரங்­கள் என மொத்­தம் 108 மரங்­கள் இந்­தத் தோட்­டத்­தில் நடப்­பட்­டுள்­ளன.

நவ­கி­ரக பாதிப்பை நீக்­கும் ஆற்­றல் அத்­தா­வ­ரங்­க­ளுக்கு உண்டு என்­பது நம்­பிக்கை என்று விளக்­கி­னார் கோவில் ஊழி­யர்.

இந்­தக் கோவி­லைச் சுற்­றி­வந்­த­போது நடுவே மற்­றொரு வினோ­த­மான சிற்­பம் என் கண்­ணில் பட்­டது. வாஸ்­து­வுக்கு மனித உரு தந்து, கிட்­டத்­தட்ட 40 அடி நீள­மான சிலை படுத்­தி­ருக்­கும் நிலை­யில் வடிக்­கப்­பட்­டுள்­ளது.

ஆல­யத்­தின் முன்­வா­ச­லில் 34 அடி உய­ர­மான விநா­ய­கர் சிலை உள்­ளது. 'நவக்­கி­ரக சாந்தி கண­பதி' என அழைக்­கப்­படும் இந்த விநா­ய­க­ரின் சிற்­பத்­தின் வெவ்­வேறு உடல் பாகங்­களில் 12 நவ­கி­ரங்­க­ளின் உரு­வங்­கள் பொறிக்­கப்­பட்­டுள்­ளன.

ஆல­யத்­தைச் சுற்றி இயற்­கைச் சூழல் நிறைந்­தி­ருப்­ப­தா­லும், கோவி­லைச் சுற்றி ஒரு­சில வீடு­கள் மட்­டுமே இருப்­ப­தா­லும், இந்த இடத்­தில் அமை­தியை உண­ர­மு­டிந்­தது.

சனிக்­கி­ழ­மை­களில் பக்­தர்­கள் இக்­கோ­வி­லுக்கு திர­ளாக வந்து எண்­ணெய் விளக்கு ஏற்றி சனீஸ் வரரை வழி­பாடு செய்­வ­தா­கக் கூறப்­பட்­டது.

வியக்க வைக்கும் நோக்கம்

இக்­கோ­விலைப் பார்த்தபோது அது அவ்வளவு பழ­மை­யா­னது இல்லை என்று தோன்­றி­யது. சுமார் 20, 30 ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் இது கட்­டப்­பட்­டி­ருக்­க­லாம் என்று என்­னு­டன் பேசிய அந்த ஆலய ஊழி­யர் கூறி­னார்.

இங்கு செதுக்­கப்­பட்ட பெரும்­பா­லான சிலை­கள் பக்­தர்­களை மலைக்க வைக்­கும் வகை­யில் வடிக்­கப்­பட்­டி­ருந்­தன. தொன்­மை­யான கோவில் கட்­ட­டங்­கள் இல்­லாத இவ்­வி­டத்­தில் பிரம்­மாண்­டத்­தைக் கொண்­டு­வ­ரும் முயற்சி போல அது தோன்­றி­யது. அச்­சி­றிய கிரா­மத்­துக்­கும் அங்­குள்ள மக்­க­ளின் நம்­பிக்­கைக்­கும் என்று தனிச்­சி­றப்பை உரு­வாக்­கும் முயற்­சி­யா­கக்­கூட அது இருந்­தி­ருக்­க­லாம்.

இந்­தக் கோவி­லி­ருந்து சுமார் இரண்டு கிலோ­மீட்­டர் தூரத்­தில் உள்ள பிரத்­தி­யங்­கிரா ஆல­யத்­தில் 72 அடி உய­ர­மான பிரத்­தி­யங்­கிரா தேவி சிலை­யும் அதே விழுப்­பு­ரம் மாவட்­டத்­தில் 12 அடி உய­ர­முள்ள ஐந்­து­முக ஆஞ்­ச­நே­யர் அமைக்­கப்­பட்­டுள்­ள­தும் நினை­வுக்கு வந்­தது.

இக்­கோ­வில் புதுச்­சே­ரி­யி­லி­ருந்து திண்­டி­வ­னம் செல்­லும் நெடுஞ் சாலை­யில் அமைந்­துள்­ளது. சுங்­கச் சாவடி ஒன்­றுக்கு அரு­கில் நவ­கி­ர­கம் கோவில் உள்­ளது.

கோவி­லுக்­குள் செல்ல சிறிய கட்­ட­ணம் உண்டு. மற்ற ஆல­யங்­கள்­போல், இங்கு பெரி­ய­ள­வில் வழி­பா­டு­கள் இல்லை.

புதுச்­சே­ரிக்கு சென்­றால், இக்­கோ­வி­லை­யும் நீங்­கள் பார்க்க விரும்­பும் இடங்­க­ளின் பட்­டி­ய­லில் சேர்த்­துக்­கொள்­ள­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!