தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஓட்டுநர் அணிவகுப்பில் வீரரை ஏற்றி வலம்வந்த இஸ்மாயில் கஃபூர்

2 mins read
055b8e4b-30d6-44db-b543-4e1080822bd4
தமது 'மோர்கன்' ரக காரில் அமர்ந்தவாறு ஓட்டுநர் அணிவகுப்பில் பங்கேற்ற புரோப்நெக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு இஸ்மாயில் கஃபூர். படம்: இஸ்மாயில் கஃபூர் -

இர்­ஷாத் முஹம்­மது

எஃப்1 பந்­த­யத்­தின் இறு­திச்­சுற்று தொடங்­கும் முன்­னர் பந்­த­யக் கார் ஓட்­டு­நர்­கள் பழம்­பெ­ரும் சிறப்­புக் கார்­களில் தடத்தை வலம்­வந்து கைய­சைத்து வரு­கை­யா­ளர்­களை மகிழ்­வித்­த­னர். மாலை ஆறு மணிக்­குத் தொடங்­கிய இந்த ஓட்­டு­நர் அணி­வகுப்­பில் ஒவ்­வொ­ரு­வ­ரும் ஒவ்­வோர் உயர்­தர காரில் வலம்­வந்­த­னர்.

அத்­த­கைய பழம்­பெ­ரும் 'மோர்­கன்' ரக காரை ஓட்­டி­வந்­த­வர் சிங்­கப்­பூ­ரின் ஆகப் பெரிய சொத்து முக­வை­யான 'புரோப்­நெக்ஸ்' நிறு­வனத்­தின் நிறு­வ­ன­ரும் தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யு­மான திரு இஸ்­மா­யில் கஃபூர். அவர் மெக்­லா­ரன் நிறு­வ­னத்­தைச் சேர்ந்த டேனி­யல் ரிக்­கி­யார்­டோ­வைத் தமது காரில் ஏற்­றி­வந்­தார். இவ்­வாண்டு அவர் 'எஃப்1' பந்­த­யத்­தின் ஓட்­டு­நர் அணி­வ­குப்­பில் பங்­கெ­டுப்­பது இது ஐந்­தா­வது முறை.

முதன்­மு­றை­யாக 2016ஆம் ஆண்­டில் ஜென்­சன் புட்­டன், 2017ல் டெனில் கிவ்­யட், 2018ல் டேனி­யல் ரிக்­கி­யார்டோ, 2019ஆம் ஆண்­டில் பியர் கேஸ்லி ஆகி­யோரை ஏற்றி வந்­த­வர் இவ்­வாண்டு மீண்­டும் டேனி­ய­லைத் தமது காரில் ஏற்றி அழ­கு பார்க்­கி­றார்.

கார்­கள் என்­றாலே அதீத ஆர்­வம் கொண்ட இஸ்­மா­யில், இந்­தக் குறிப்­பிட்ட 'கிளா­சிக்' காரை கிட்­டத்­தட்ட பத்­தாண்­டு­க­ளுக்கு முன்­னர் வாங்­கி­னார்.

குடும்­பத்­தி­ன­ரு­டன் காலை நேரங்­களில் ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா, டெம்ப்ஸீ ஹில் போன்ற பகு­தி­களுக்­குச் சிற்­றுண்டி உண்­ணச் செல்­லும்­போது இந்­தக் காரைப் பயன்­ப­டுத்­து­வ­தா­கத் தெரி­வித்­தார்.

"காலை நேரங்­களில் திறந்­த­வெ­ளி­யில் காற்று வீச குடும்­பத்­தி­ன­ரு­டன் இந்­தக் காரை ஓட்­டிச் செல்­வது எனக்கு மகிழ்ச்­சி­த­ரும் அனு­ப­வம்," என்­றார் அவர்.

பிரிட்­ட­னில் தயா­ரிக்­கப்­படும் 'மோர்­கன்' ரக கார்­கள் விலை­ உயர்ந்­தவை.

இந்­தக் கார்­கள் $300,000 முதல் அரை மில்­லி­யன் வெள்ளி வரை­யில் விற்­கப்­ப­டு­கின்­றன.

கரும்­பச்சை நிறத்­தி­லான திரு இஸ்­மா­யி­லின் கார், 1973ஆம் ஆண்­டில் வடி­வ­மைக்­கப்­பட்ட கார் ரகம். நான்கு பேர் அம­ரக்­கூ­டிய அந்­தக் கார் குறை­வான எடை­யும் கொண்­ட­தாம். இத்தகைய பழம்­பெ­ரும் அழகு காரில் வலம்­வ­ரு­வது தமக்கு மட்­டு­மன்றி ஓட்­டு­நர் அணி­வ­குப்­பைக் காணத் திரண்ட அனை­வ­ருக்­கும் களிப்பை ஊட்­டி­யி­ருக்­கும் என்றால் அது மிகையாகாது.

irshathm@sph.com.sg